மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் 114-க்கும் மேற்பட்ட காட்சிகளின் குறுக்கு விசாரணை முடிந்திருந்த நிலையில் மருத்துவர்களிடம் விசாரணை நடைபெற்றபோது மருத்துவ நிபுணர்களின் குழுவை அமைத்துதான் விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பல்லோ நிர்வாகம் வலியுறுத்தியது. ஆனால் ஆணையம் அதை ஏற்காததால் அப்பல்லோ நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையில் ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு 2 வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த சூழலில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ நிபுணத்துவம் பெற்ற 6 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவை எங்கள் இயக்குனர் அமைக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி நிகில்தாண்டன் தலைமையில் மருத்துவ குழு அமைக்கப்பட்டது. இப்போது இந்த மருத்துவ குழு மாற்றி அமைக்கப்பட்டு சந்தீப் சேத் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் இயக்குனர் ஆறுமுக சாமி ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் இன்று மீண்டும் செயல்பட தொடங்கியது. அப்போது யார் யாருக்கு சம்மன் அனுப்பலாம் என ஆலோசிக்கப்பட்டது. ஆணையத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், அப்பல்லோ மருத்துவமனை வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறினேன். நீங்கள் யார் யாரை விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறீர்களோ அதன்பிறகு எங்களது பதிவை தெரிவிக்கிறோம் என்றேன். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்பதற்கு அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆணையம் 8 முறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் விசாரணையில் ஆஜராகாமல் 4 முறை வாய்தா வாங்கினார். நான் சுப்ரீம் கோர்ட்டில் பணி காரணமாக 2 முறை வாய்தா வாங்கி இருந்தேன். எனவே இப்போதும் ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து விசாரிப்பது பற்றி ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். 154 சாட்சிகளில் நான் 114 சாட்சிகளிடம் ஏற்கனவே குறுக்கு விசாரணையை முடித்து விட்டேன். எனவே ஆணையத்தில் விசாரணை தொடங்கினால் 10 நாளில் எனது குறுக்கு விசாரணையை முடித்து விடுவேன். தற்போது ஆணையத்துக்கு உதவுவதற்கு எய்ம்ஸ் டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எல்லா தஸ்தாவேஜூக்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.