தேசிய செய்திகள்
தொழில்நுட்பம்
TRENDING VIDEO
Login
அரசியல்
ஆரோக்கியம்
மருத்துவம்
நாட்டில் முதல் முறையாக சென்னையில் அரசு இலவச செயற்கை கருத்தரிப்பு மையம்
நாட்டில் முதல் முறையாக சென்னையில் அரசு இலவச செயற்கை கருத்தரிப்பு மையம்
நாட்டிலேயே முதல்முறையாக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் ரூ.6.97கோடியில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் – பிரசவ வளாகம் திறக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக கட்டணமின்றி சிகிச்சை அளிக்கும் வகையிலான இந்த வளாகத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.அப்போது அவர்கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு, இந்த கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் மகப்பேறுகளில் தாய்மார்களின் இறப்பு 70-க்கும் மேல் இருந்தது. மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து, அதில்வெற்றியும் கண்டுள்ளது. இதையடுத்து, இறப்பு எண்ணிக்கை 2 ஆண்டுக்கு முன்பு 54, கடந்த ஆண்டு 52, இந்த ஆண்டு 45 எனபடிப்படியாக குறைந்துள்ளது.இந்தியாவில் 25-45 வயது பெண்களிடம் கருத்தரிப்பின்மை பாதிப்பு 3.9 சதவீதம் இருப்பதை உலக சுகாதார மையம்உறுதிப்படுத்தியுள்ளது. உடற்பயிற்சி இல்லாதது, உடல் பருமன், உணவு பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவைதான் இதற்கான காரணங்களாக உள்ளன.அரசு சார்பில் எழும்பூர் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையத்தை தொடங்கி வைத்துள்ளோம். 8 படுக்கைகள் கொண்ட அதிநவீன பிரசவ அறை திறந்து வைக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் கூட இல்லாத அளவுக்கு தரமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டிருப்பது நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். சண்டிகர், டெல்லி, மகாராஷ்டிரா அரசுமருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் ஏற்கெனவே இருந்தாலும், அங்கு ஒரு கருத்தரிப்பு சுழற்சிக்கு ரூ.2.5 லட்சம் வரை செலவாகும். ஒரு குழந்தை பிறக்க ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை தேவைப்படும்.ஆனால், நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் முழுமையாக இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு அதிநவீன பிரசவஅறை ரூ.89.96 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 2-வது செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்குவதற்கான பணி நடந்துவருகிறது. அந்த மையமும் விரைவில் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி
சென்னையில் பஸ், ரயிலில் செல்ல ஒரே டிக்கெட்… எப்போது அமலுக்கு வரும்?
சென்னை முழுவதும் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் மூன்றிலும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் செயலி அடுத்தாண்டு ஜனவரியில் நடைமுறைக்கு வரும் என சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய (சியுஎம்டிஏ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் இருக்கக்கூடிய நிலையில் இந்த மூன்றிற்கும் மக்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து வருகின்றனர்.இத்தகைய பயண சீட்டிற்கு மாற்றாக இவை அனைத்தும் ஒரே பயண சீட்டாக கொண்டுவர கூடிய வகையில் இந்த நடைமுறை மேற்கொள்ள பட உள்ளது.
இதற்காக பிரத்தியேக மொபைல் செயலி உருவாக்கப்பட உள்ளது. இந்தச் செயலியில் பலதரப்பட்ட பயணங்களுக்கான ஒரேபயணச்சீட்டை பெற்று கொள்ளலாம். இந்தசெயலி அடுத்தாண்டு ஜனவரியில் நடைமுறைக்கு வரும் என சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய (சியுஎம்டிஏ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது,
“இந்த செயலியை உருவாக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை மூவிஸ் டெக் இன்னோவேஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் சியுஎம்டிஏ வழங்கியது. செயலியை உருவாக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டு அதனை தொடர்ந்து மாநகர போக்குவரத்து கழக பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உதாரணமாக சைதாப்பேட்டையில் இருந்து தலைமைச் செயலகம் ஒருவர் செல்ல உள்ளார். அப்போது அவர் இந்த செயலியில் தான் புறப்பட வேண்டிய இடத்தையும் சேர வேண்டிய இடத்தையும் பதிவிட்டால் அவர் சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வரை மெட்ரோ ரயிலில் சென்று அங்கிருந்து அரசு பேருந்தில் தலைமைச் செயலகம் செல்லலாம் என்பதை அவருக்கு காண்பிக்கும்.
மேலும் அப்போதே சைதாப்பேட்டையில் இருந்து மெட்ரோ ரயில் புறப்படும் நேரத்தையும் அந்த ரயிலில் அவர் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தை அடையும் நேரம், அங்கிருந்து அவருக்கு தலைமைச் செயலகத்துக்கு அரசு பேருந்து புறப்படும் நேரம் மற்றும் அந்த பேருந்து தலைமைச் செயலகத்தை அடையும் நேரம் ஆகியவற்றை காண்பித்து விடும். எனவே இந்த செயலி பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மாநகரப் போக்குவரத்துக்கழகத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பேருந்தின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ளும் வசதி உள்ளதா? அவ்வாறு இருப்பின் அதனை ஒருங்கிணைந்த செயலியில் இணைப்பதில் எதும் பிரச்னை உள்ளதா? என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. டிசம்பரில் இந்த செயலி தயாராகிவிடும் அதனைத் தொடர்ந்து ஜனவரியில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்திய ரயில்வேயுடனும் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
முதலில் இந்த செய்தியானது புறநகர் மின்சார ரயில்களுக்காக தினசரி ஒருங்கிணைந்த பயணச் சீட்டை பெற்றுக்கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து சீசன் பயணச்சீட்டுகளும் பெற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்படும். தங் களது பயணத்தின் கடைசி கட்டமாக ஆட்டோக்களை தேடும் பயணிகளுக்காக நம்ம யாத்திரி ஆட்டோ எனும் வசதியும் இருக்கும்.
இவ்வாறு சியுஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்வி
கல்வி தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: தமிழக அரசு பெருமிதம்
சென்னை,தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ல் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்ந்த கல்வி பெறவேண்டும் எனப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள்.பேராசிரியர் அன்பழகன் பள்ளி...
கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கிய கவர்னர்
கோவை:கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி வரவேற்றார்.விழாவில் மத்திய...
சென்னை அசோக்நகர் பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை திரும்ப பெற வேண்டும்: சீமான்
சென்னை: சென்னை அசோக்நகர் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவுக்கு அனுமதித்த தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்ததை திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,...
மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மாணவ-மாணவிகள் உயர்கல்வி படிக்கும் நோக்கத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி அரசு பள்ளிகளில் படித்து விட்டு பின்னர் உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும்...
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ந்தேதி ஒரே விண்ணப்பம்
கோவை:தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்கும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத் துக்கும் ஒரே விண்ணப்பம்...