தேசிய செய்திகள்
தொழில்நுட்பம்
TRENDING VIDEO
Login
அரசியல்
ஆரோக்கியம்
மருத்துவம்
தமிழ்நாடு முழுவதும் 1000 மருத்துவ முகாம்கள் : நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் அரசு!
சென்னை, தேனாம்பேட்டை மண்டலம், மயிலாப்பூர், கார்னேஸ்வரர் பகோடா தெரு. சமுதாய நலக்கூடத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,” வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, வடகிழக்கு பருவமழைகளை ஒட்டி ஏற்படுகின்ற நோய்களை தடுப்பதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப இன்று ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 4 மணி வரை நடைபெறும் இம்முகாம்களில் மக்கள் பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பாக மழைக்காலங்களில் வருகின்ற நோய்களான டெங்கு. மலேரியா, டைபாய்டு போன்ற காய்ச்சல் பாதிப்புகளுக்கு இம்முகாம்களில் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது. அதேபோல் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற நோய் பாதிப்புகளுக்கும், சேற்றுப்புண் போன்ற பாதிப்புகளுக்கும் மருந்துகள் வழங்கப்பட உள்ளது. மேலும் தேவையான அளவிற்கு மருந்துகள் கையிருப்பில் இருக்கின்றது.
சென்னையைப் பொறுத்தவரை 100 இடங்களில் இம்மருத்துவ முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் இம்முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கிராமமோ அல்லது நகரமோ அல்லது ஏதாவது தெருக்களிலோ ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் இருக்குமேயானால் அந்த பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
நேற்று மாவட்ட அளவிலான சுகாதாரத்துறை உயரலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் காணொளி வாயிலாக நடத்தப்பட்டது. பொதுவாக இந்த ஆண்டு குளிர்கால மழையாக இருந்தாலும், கோடை வெப்ப மழையாக இருந்தாலும், வெப்பச்சலன மழையாக இருந்தாலும், தென்மேற்கு பருவமழையாக இருந்தாலும் பெய்யும் அளவினை விட கூடுதலாக பெய்வது தொடர்ந்து வருகிறது. அந்தவகையில் வடகிழக்கு பருவமழையும், இயல்பை விட கூடுதலாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவேதான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10க்கும் மேற்பட்ட சேவை துறைகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டத்தை நடத்தி, வடகிழக்கு பருவமழையினை எவ்வாறு எதிர்கொள்வது, அதனால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு தடுப்பது, வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படுகின்ற நோய் பாதிப்புகளை தடுப்பது தொடர்பாக கூட்டம் நடத்தி அறிவுறுத்தியிருந்தார்கள். அதேபோல் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 3 முறை சேவை துறைகளை ஒருங்கிணைத்து, மழைக்கால நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தியிருந்தார்கள்.
சென்னையைப் பொறுத்தவரை தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீரினை வெளியேற்றுவதற்கு 990 கிலோ வாட்ஸ் திறன் கொண்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருக்கிறது. 57 டிராக்டர் பொறுத்தப்பட்ட பம்பு செட்களும், 169 மையங்கள் எண்ணிக்கையிலான தயார் நிவாரண நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.
மரங்கள் விழுந்தால் அவற்றை உடனடியாக அகற்றுவதற்கு 280 மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார்நிலையில் களத்தில் இருந்துக் கொண்டிருக்கிறது. 35 சமையலறை அறைகள் தயார் செய்யப்பட்டிருக்கிறது.
கோபாலபுரம், சிந்தாதிரிபேட் பகுதிகளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1000 முதல் 1500 பேர் வரைக்கும் சமைப்பதற்கு அதிநவீன சமையல் கூடமும் தயார்நிலையில் இருக்கின்றது. இப்படி சென்னையில் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் அனைத்தும் தயார்நிலையில் இருக்கின்றது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் கடந்த 2 நாட்களாக இரவு, பகல் பாராமல் அடையார் பங்கிங்காம் கால்வாய் முகத்துவாரம், கூவம் முகத்துவாரம் போன்ற பல்வேறு பகுதிகளில் கடலில் நீர் கலக்கும் பகுதிகளில் மழைநீர் தடையின்றி செல்வதற்குரிய வழிவகைகளை நேரிடையாகவே ஆய்வு செய்து வருகிறார்கள். நேற்று இரவு 12 மணியளவில் மழை பெய்து கொண்டிருந்தாலும் துணை முதல்வர் அவர்கள் பம்பரமாக சுழன்று மழைக்கால தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். எனவே மழைக்கால நோய் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
மழைநீர் வடிகால்கள் தொடர்பான கேள்விக்கு இந்த அரசு பொறுப்பேற்றபிறகு மழைநீர் வடிகால்கள் அமைப்பதில் பெரிய அளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை போன்ற துறைகளை ஒருங்கிணைத்து சென்னை பகுதிகளில் மழைநீர் எங்கேயெல்லாம் தேங்குமோ அந்த பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 5 செ.மீ அளவிற்கு மழை பொழிவு இருந்திருக்கிறது. இன்று காலை 5 மணியிலிருந்து பிரதான சாலைகளில் சுற்றிப்பார்த்தேன், எந்த இடங்களிலும் நீர்த்தேக்கம் என்பது இல்லை.
மருந்து தட்டுப்பாடு தொடர்பான கேள்விக்கு நேற்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்திருந்தோம். எடப்பாடி தொகுதியில் கூட 5 மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்தேன். அந்த பகுதியில் சுமார் 4000 பேர் பங்கேற்றிருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் நான் சொன்னது இந்த அரசு பொறுப்பேற்றபிறகு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக்கடிக்கும், நாய்க்கடிக்கும் மருந் கடந்த 2 ஆண்டுகளாகத்தான் இருந்தது. வேறு எந்த காலத்திலும் மருந்துகள் இல்லை. அவர் எப்போதாவது பதில் சொல்லியிருக்கிறாரா? எங்களுடைய கேள்விகளுக்கு இதுவரை அவர் பதில் சொன்னதில்லை, பொதுமக்களிடம் நான் சொன்னேன், உங்கள் MLA தான் மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை என்று சொல்கிறார், ஆனால் எந்த மருத்துவமனை என்று ஆய்வு செய்ய மாட்டார், அவரை ஆய்வு பன்ன சொல்லுங்க, போகும் வழியில் எல்லாம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் என நிறைய இருக்கிறது, எங்கு மருந்துகள் தட்டுப்பாடு இருக்கிறது என்று ஆய்வு பன்ன சொல்லவும், அவர் சார்பில் பொதுமக்கள் ஆகிய நீங்கள் எந்த மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருக்கிறது என்று ஆய்வு பன்னவும்.
மேலும் துணை முதலமைச்சர் அவர்கள் இரவு, பகல் பாராமல் மழைக்கால முன்னெச்சரிக்கைகளை தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார், அதுபோன்று எடப்பாடி அவர்கள் இரவு நேரங்களில் ஏதாவது ஒரு பகுதிக்கு சென்று பார்வையிட்டு இருக்கிறாரா? என்று எடப்பாடியிடம் கேட்டு சொல்லவும்.
இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 104 என்னும் இலவச கட்டணமில்லா தொலைபேசி மூலம் குறைகளை தெரிவிக்கலாம், 40க்கும் மேற்பட்ட இணைப்புகள் தயார்நிலையில் இருக்கின்றது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை 1913 கட்டணமில்லா தொலைபேசி எண் பயன்பாட்டில் இருக்கின்றது. 150 இணைப்புகள் தயார்நிலையில் இருக்கின்றது.” என தெரிவித்துள்ளார்.
செய்தி
‘விஜய் என்னை எதிர்த்து வேலை செய்தாலும் அவரை நான் ஆதரிப்பேன்’ – சீமான்
சென்னை,
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்த அவர், தற்போது கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், விஜய்க்கு தனது ஆதரவு எப்போதும் இருக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
“யானை என்பது ஒரு கட்சிக்கு மட்டுமே சொந்தமானதா? தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே விஜய்யை பற்றி பேசுகின்றனர். அவர் ஒரு புகழ்பெற்ற திரைக்கலைஞர் என்பதால் அவர் ஒரு கட்சி ஆரம்பிக்கும்போது என்னைப் போன்றவர்களிடம் கேள்வி கேட்கிறார்கள். நாங்கள் பதில் சொல்கிறோம்.
அவரது கொள்கைகள் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆயிரம்தான் இருந்தாலும் விஜய் என் தம்பி. அவரை நான் எப்போதும் ஆதரிப்பேன். விஜய் என்னை எதிர்த்து வேலை செய்தாலும் அவரை நான் ஆதரிப்பேன். அதில் எந்த பிரச்சினையும் கிடையாது.”
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
கல்வி
பள்ளி வேலை நாட்கள 210 ஆக குறைப்பு – திருத்தப்பட்ட கல்வியாண்டு நாட்காட்டியை வெளியிட்டது கல்வித்துறை
:தமிழ்நாட்டில் பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, உயர்கல்வி வழி காட்டி முகாம் உள்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018 முதல் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பு...
கல்வி தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: தமிழக அரசு பெருமிதம்
சென்னை,தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ல் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்ந்த கல்வி பெறவேண்டும் எனப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள்.பேராசிரியர் அன்பழகன் பள்ளி...
கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கிய கவர்னர்
கோவை:கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி வரவேற்றார்.விழாவில் மத்திய...
சென்னை அசோக்நகர் பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை திரும்ப பெற வேண்டும்: சீமான்
சென்னை: சென்னை அசோக்நகர் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவுக்கு அனுமதித்த தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்ததை திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,...
மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மாணவ-மாணவிகள் உயர்கல்வி படிக்கும் நோக்கத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி அரசு பள்ளிகளில் படித்து விட்டு பின்னர் உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும்...