உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகள் 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள் தேர்தல் நடைபெறும் நிலையில் நகர்ப்புற பகுதிகளில் மட்டும் மூடப்படுகிறது.
தேர்தல் நடைபெறாத பிற பகுதிகளில் மதுக்கடைகள் செயல்படுகின்றன. அவற்றையும் மூட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதால் மதுபிரியர்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகக் கூடும். தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால் மது விற்பனை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கடைகள் மூடப்படுவதால் சரக்குகளை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

ஓட்டுப்பதிவு சனிக்கிழமை நடைபெறுகின்ற சூழ்நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாகவே மதுக்கடைகள் அடைக்கப்படுகின்றன. இதனால் மதுபானங்களை அதிகளவு வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். கடைகள் மூடப்படுவதை தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் போதுமான அளவு சரக்குகளை அனைத்து கடைகளிலும் இருப்பு வைக்க அறிவுறுத்தி உள்ளது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று இரவு 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை இருப்பு வைத்தனர். இன்று மதியம் 12 மணிக்கு கடைகள் திறப்பதற்கு முன்னதாகவே மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். இரு சக்கர வாகனங்களிலும், கார்களில் சென்று மொத்தமாக மதுபானங்களை பெட்டி பெட்டியாக வாங்கி சென்றனர். பிராந்தி, விஸ்கி, ரம், பீர் போன்ற அனைத்து வகையான மதுபானங்களையும் வாங்கி குவித்து வருகிறார்கள். டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்

சென்னையில் உள்ள எல்லா கடைகளிலும் கூட்டம் இன்று அலைமோதியது. மாலையில் இருந்து கூட்டத்தை கட்டுப்படுத்த ஒரு சில கடைகளில் போலீசாரும் குவிக்கப்படுகிறார்கள். இரவு 10 மணிக்கு கடைகள் மூடப்படுவதால் அதற்கு முன்னதாக மதுபானங்களை வாங்கி செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் கடைகளை நோக்கி படையெடுக்கின்றனர். இதனால் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. கடை ஊழியர்களால் மதுபானங்களை சப்ளை செய்ய முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது. தினமும் சராசரியாக ரூ.80 கோடிக்கு மது விற்பனையாவது வழக்கம். இந்நிலையில் 3 நாட்கள் கடைகள் மூடப்படுவதால் இன்று ஒரே நாளில் ரூ.200 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons