தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவர் கூறியதாவது:- நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. மாணவர்களின் நலனை விரும்பவில்லை. பொய்யான தகவல்களை தெரிவித்து மக்களை ஏமாற்றி வருகிறது. கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தகுதியுடைய 24, 949 விண்ணப்பதாரர்களில் 14,618 பேர் நீட் கோச்சிங் செல்லாதவர்கள்.

அதாவது தகுதிபெற்ற மாணவர்களில் 59 சதவீதம் பேர் நீட் கோச்சிங் செல்லாதவர்கள் இந்த புள்ளி விபரங்கள் மருத்துவ துறையில் உள்ளது. ஆனால் 99 சதவீதம் பேர் நீட் கோச்சிங் பெற்றவர்கள் தான் தகுதி பெற்றதாக தி.மு.க. பொய்யான தகவல்களை கூறிவருகிறது. மக்கள் நலனை மறந்துவிட்டு பொய்யை மட்டும் மூலதனமாக வைத்து அரசியல் நாடகத்தை நடத்தி வரும் தி.மு.க.வை வீழ்த்த தீவிர பிரசாரம் செய்வோம். தி.மு.க. கூறி வரும் ஒவ்வொரு பொய்களையும் தகர்த்தெறிவோம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons