Category: மாவட்ட செய்திகள்

*கோவிலுக்கு தானமாக பசுக்கள் மாட்டிறச்சிக்கு கடைக்கு போகிறதா ?*

*கோவிலுக்கு தானமாக பசுக்கள் மாட்டிறச்சிக்கு கடைக்கு போகிறதா ?*

மத்திய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானது பிஆர்.பாண்டியன் எச்சரிக்கை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் மன்னார்குடியில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மத்திய அரசு மோடி தலைமையிலான ஆட்சியின் இரண்டாவது ஆட்சி காலத்தின இறுதி கட்டபட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே பாரதிய ஜனதா கட்சியும்,மத்திய அரசும் மாறி மாறி 2022க்குள் விவசாயிகளுடைய வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்று உத்திரவாதம் அளித்தது. ஆனால் இன்றைக்கு 2022 முடிந்து 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிற முன்னோட்டமான இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் ஏமாற்றம் அளிக்கிறது. வேளாண் வளர்ச்சிக்கான அனைத்து கொள்கை திட்டங்களும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரித்த மறைமுக அறிக்கையாகவே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக விவசாயிகள் ஓராண்டு காலம் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராகவும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் கொண்டு வர வலியுறுத்தி போராடி வந்தார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் நான் குறைந்தபட்ச ஆதார விலை தருவதோடு, வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி நேரடியாகவே வேண்டுகோள் விடுத்தார். பிரதமருக்கு மதிப்பளித்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு ஓராண்டு நிறைவு பெற்று பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட் பிரதமர் உத்தரவாதத்தை நிறைவேற்றுகிற வகையில் அமையும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் அதற்கு நேர் மாறாக விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருவாய் கொடுக்கிற லாபகரமான விலை குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. அதுபோல வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தாரே தவிர, இரண்டாண்டு காலம் அந்த சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை தொடரும் நிலையில் மறைமுகமாக வேளாண் சட்டங்களுக்கான திட்டங்களை முன்னிறுத்தி தான் இந்த பட்ஜெட் வெளிவந்திருக்கிறது. வேளாண் சட்டங்களை ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவாக தான் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.மறைமுகமாக அதற்கேற்ப பட்ஜெட் திட்டங்களும் கார்ப்பரேட்டுகள் ஆதரவாக உள்ளது. குறிப்பாக 20 லட்சம் கோடி வேளாண் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு மிகைப்படுத்தப்படுகிறது. உண்மையிலேயே வேளாண் கடன் வாங்குவதற்கு இந்தியாவில் 80% விவசாயிகளுக்கு தகுதியில்லை என வங்கிகள் கருப்பு பட்டியலில் இணைத்து விட்டனர்.அது மட்டும் இன்றி மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கிற கடன்களை வழங்க மாட்டோம். எங்களுக்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் படி மட்டுமே கடன் வழங்க முடியும் என்று விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்க மருத்துவிடுகிறார்கள். அப்படியானால் விவசாயிகளுக்கு 20 லட்சம் கோடி கடனை கொடுப்பதற்கு என்ன நிதி திட்டமிடல் என்ன? என்பது கேள்வியாக உள்ளது. விவசாயிகள் லாபம் பெறுகிற வகையில் ஏற்றுமதி இறக்குமதி கொள்கை அமைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மிகை உற்பத்தி காலத்தில் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதும்,அடிமாட்டு விலைக்கு இடைத்தரர்கள் கார்ப்பரேட்டுகளோடு இணைந்து கொள்முதல் செய்து கிடங்குகளில் இருப்பு வைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. தட்டுப்பாடு காலத்தில் உள்நாட்டிலேயே கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிக்க வழிவகுக்கிறது. குறிப்பாக பதுக்கல் காரர்கள் தான் வேளாண்மைக்கு ஒதுக்கப்படுகிற கடன்தொகை முழுவதையும் கிடங்குகளில் இருப்பு வைக்கும் உணவு தானிய பொருட்களை இருப்பு காட்டி வங்கிகளில் வட்டி சலுகைகளையுடன் கடன் பெற்று முழு பயனையும் கார்ப்பரேட்டுகள் அடையும் நிலை உள்ளது. உதாரணத்திற்குஅரிசிக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் ஆறு மாத காலம் தடை விதித்திருக்கிறார்கள். இதனால் உற்பத்தி மிகையாக இருக்கிற இக்காலத்தில் தடையால் விவசாயிகளுக்கு நெல்லுக்கு லாபகரமான விலை கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது. நெல்லை அடிமாட்டு விலைக்கு வாங்கி கிடங்குகளில் பதிக்கி வைத்து விற்பதற்கு சாதகமான சட்டங்களை முன்கூட்டியே கொண்டு வந்து விட்டு விவசாயிகளுக்கு 20 லட்சம் கோடி நிதி ஒதுக்குகிறோம் என்கிற பெயரில் மிகைப்படுத்தி விவசாயிகளை ஏமாற்றவும், இந்தியாவில்விவசாயி மீது தவறான பார்வையை திருப்பவும் பட்ஜெட் மூலம் மத்திய அரசு முயற்சிக்கிறது. எனவே பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான முறையிலே கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக மத்திய அரசு பிரதமர் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் லாபகரமான விலை கிடைப்பதற்கான சட்டத்தையும், விவசாயிகளுக்கு சாதகமான ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்துவதற்கான சட்ட முறைகளையும் கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இல்லையேல் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகும் என எச்சரிக்கிறேன் என்றார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன் மாநிலத் துணைச் செயலாளர் எம் செந்தில் குமார் கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம் தெய்வமணி வலங்கைமான் ஒன்றிய செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மத்திய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானது பிஆர்.பாண்டியன் எச்சரிக்கை

மத்திய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானதுபிஆர்.பாண்டியன் எச்சரிக்கைதமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் மன்னார்குடியில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து…

*அமைச்சர் உதயநிதி மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் ! -சாட்டையை சுழற்றும் சவுக்கு-*

*அமைச்சர் உதயநிதி மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் ! -சாட்டையை சுழற்றும் சவுக்கு-* உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்பது முதல்வர் ஸ்டாலினின்…

ஈரோடு:அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணி தொடங்கியது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகரிடம் கேட்டபோது கூறியதாவது:-கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது. த.மா.கா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தல் வந்துள்ளது. கூட்டணி தர்மபடி தமிழ் மாநில காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. கூட்டணி பொருத்தவரை தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் அவகாசம் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தலைவர் ஜி.கே.வாசன் முறைப்படி கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவு செய்வார். நாங்கள் தொடர்ந்து அ.தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க.வை பொருத்தவரை அவர்கள் தேர்தல் பணி தொடங்கி விட்டார்கள். கூட்டத்தில்கூட கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று முடிவு செய்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.-த.மா.கா இடையே எந்தஒரு போட்டியோ மோதலோ ஏற்படவில்லை.அ.தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ், பாரதி ஜனதா ஆகிய எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பலமான எதிர்கட்சியாக உள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கடந்த 18 மாதமாக பல்வேறு பிரச்சினைகள் மக்கள் சந்தித்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.இந்த தேர்தலை பொருத்தவரை நாங்கள் அ.தி.மு.க. தலைமையில் தி.மு.க. அரசின் விரோத போக்கை எடுத்து கூறுவோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இரண்டு தலைவர்கள் கூடி பேசி முடிவு செய்வார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.இதன் மூலம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் த.மா.கா.வும் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் இப்போதே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, நேற்று முதல் நாளில் சென்னையிலிருந்து1.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக, 16 ஆயிரத்து 932 பேருந்துகள் நேற்று (ஜன. 12) முதல் இயக்கப்படுகின்றன. சென்னை, கோவை, திருப்பூர், சேலம் போன்ற தொழில் நகரங்களில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களுக்கு ஜன.12 முதல் 14-ஆம் தேதி வரையும், ஜன.16 முதல் 18-ஆம் தேதி வரையும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் நாளில்சென்னையிலிருந்து1.34 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது. நேற்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 586 பேருந்துகள் என மொத்தம் 2,686 பேருந்துகளில் 1,34,300 பேர் பயணித்துள்ளனர்.

கடந்த 6 ஆம் தேதி சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பாஜக மாவட்ட துணை தலைவர் ரவி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் கடந்த 6 ஆம் தேதி பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில் முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரத்தின் ஆதரவாளர் ரவி மற்றும் புதிய மாவட்ட தலைவர் அருள் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி இருதரப்பினரிடையே கைகலப்பாக மாறியதில் பாஜக நிர்வாகிகள்ஒருவருக்கொருவர் நாற்காலிகளை வீசி தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்ட துணை தலைவர் ஆரூர் ரவி கட்சியின் கட்டுப்பாட்டை மீறியுள்ளார். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதனால் அவர் பொறுப்பில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார்” என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ய

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான இரட்டை பதவி வழக்கு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட்

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான இரட்டை பதவி வழக்கு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் சென்னை:ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஆதாயம் தரும்…

கழுதை மேய்ச்சாலும் கவர்மெண்ட் கழுதையை மேய்க்கனும் என்பார்கள் அது போல பேரு தான் அரசாங்க கம்பெனி.ஆனா ஒன்னுத்துக்கும் புண்ணியம் இல்ல 4ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்யவே வழி இல்ல இதுல எங்க இருந்து 5ஜி வரப்போகுது?" என்று பிஎஸ்என்எல் நிறுவனத்தை பார்த்து நக்கல் அடித்தவர்கள் எல்லாம்.. 'கப்சிப்' என்று அடங்கிப்போகும் அளவிற்கு ஒரு தகவல் வெளியாகி உள்ளது! அதென்ன தகவல்? பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நேர்மையை பற்றியும், பொறுமையை பற்றியும் பேசும் அளவிற்கு அப்படி என்ன நடந்துள்ளது? இதோ விவரங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இருக்கும் நிதி நெருக்கடிகள், அதன் மீதான புறக்கணிப்புகள், ஒரவஞ்சனைகள் மற்றும் விமர்சனங்களை பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை.இருந்தாலும் கூட இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக எப்படியாவது 4ஜியை அறிமுகப்படுத்தி விட வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து வருகிறது.அந்த முயற்சிக்கும், BSNL நிறுவனத்தின் நேர்மைக்கும், பொறுமைக்கும் ஒரு மகத்தான பரிசு கிடைத்துள்ளது. அதை ஒரு பரிசு என்று கூறுவதை விட பெருமை என்றே கூறலாம்; அதுவும் பல கோடிகளை கொட்டும் அம்பானிக்கும், மிட்டலுக்கும் கூட கிடைக்காத ஒரு பெருமை BSNL-க்கு கிடைத்துள்ளது! உள்நாட்டு உபகரணங்களுடன் 4ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தும் முதல் இந்திய தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர் என்கிற பெருமையை பிஎஸ்என்எல் சொந்தமாக்கி கொள்ள உள்ளது. இந்த பெருமை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவிடமும் இல்லை சுனில் பார்தி மிட்டலின் ஏர்டெல் நிறுவனத்திடமும் இல்லை!நினைவூட்டும் வண்ணம், 4ஜி நெட்வொர்க்கிற்கான உபகரணங்களை இந்திய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுமாறு, பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் அரசாங்கம் கேட்டுக் கொண்டது. அரசாங்கத்தின் உத்தரவை மிகச்சரியாக செய்ததன் விளைவாகவே BSNL-க்கு இப்படி ஒரு பெருமை கிடைத்துள்ளது! பிஎஸ்என்எல் நிறுவனம், இந்தியா முழுவதும் தனது 4ஜி சேவைகளை வெளியிட டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் (Tata Consultancy Services - TCS) உதவியைப் பெற போகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க்கை மட்டுமல்ல, 5ஜி நெட்வொர்க்கை வெளியிடவும் கூட டிசிஎஸ் நிறுவனம் உதவலாம். அதாவது தேஜாஸ் நெட்வொர்க்குஸ் (Tejas Network) மற்றும் டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (Centre for Development of Telematics) ஆகியவற்றை உள்ளடக்கிய TCS தலைமையிலான கூட்டமைப்பு BSNL 5G வெளியீட்டிற்கும் கூட கைகொடுக்கலாம். ஆக நேரம் பார்த்து தட்டி தூக்கிய பிஎஸ்என்எல் நிறுவனம்.

மேலும் படிக்க