தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வேளாண் கல்லூரி  கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு)

முனைவர் ரவீந்திரன் தலைமையற்றார்

 

மாநாட்டு அமைப்பாளர் வாழை கருப்பையா அனைவரையும் வரவேற்றார்.

வேளாண் கல்லூரி முதல்வர் முனைவர் சுப்ரமணியன் முன்னிலை ஏற்றார்.

 

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும், மாநாடு ஒருங்கிணைப்பாளருமான

பிஆர் பாண்டியன் பங்கேற்று பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது

 

தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் முதல் மாநாடு சென்ற 2025 நவம்பர் 19ஆம் தேதி கோவையில் நடைபெற்றது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

2027 சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் ஜனவரி 22 23 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.மாநாட்டில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்திய வேளாண்மை துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தமிழக ஆளுநர் அர்லேக்கர் ஆகியோர் பங்கேற்க அழைப்பு கொடுத்துள்ளோம்.

 

மாநாட்டில் இயற்கை வேளாண் உற்பத்தியை ஊக்கப்படுத்தவும் சந்தைப்படுத்துவதற்கான தொழில் நுட்பத்தை உருவாக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளோம்.

 

உலகளாவிய ஏற்றுமதியாளர்கள், வணிகர்கள்,

உழவர்கள் பங்கேற்று  வேளாண் பொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்துவதற்கான கலந்துரையாடலை நடத்த உள்ளோம்.

இதனை உள்ளடக்கிய பட்டிமன்றம் அமருங்கள் நடைபெறும்.

இயற்கை வேளாண் தொழில்நுட்ப வல்லுனர்கள் உழவர்கள் பங்கேற்க உள்ளனர்.

 

இம்மாநாட்டில்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் , இந்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்,தமிழக ஆளுநர் அர்லேக்கர்

உள்ளிட்டோரை பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம்.

 

பெரியாறு,

வைகை பாசன பகுதிகளில் இரு போக சாகுபடி மற்றும் ஒரு போக சாகுபடியும் அழிந்தள்ளது. வைகை அணை நிரம்ப வில்லை.

 

காவிரியில் மேட்டூர் அணை 54 அடிக்கு குறைவாக தண்ணீர் சென்று விட்டது. மழையில் முளைத்த பயிர்கள் காவிரி டெல்டாவில் மூழ்கியுள்ளது.காவிரி டெல்டாவில் பயிர்களை வளர்த்தாலும் கதிர் வரக்கூடிய நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது சாகுபடி பொய்த்து போய்விடும்.

 

எனவே ஒட்டுமொத்தமாக பெரியாறு,

வைகை பாசனப்பகுதியையும்,காவிரி டெல்டா மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து வறட்சி நிவாரண பணிகளை துவங்க வேண்டும்.

 

இதனால் விவசாயிகள் பெற்றுள்ள கடனை திரும்ப செலுத்தும் தகுதியை இழந்துவிட்டனர். எனவே கடன் முழுமையும் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள முன் வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

 

காவிரி,வைகை, தென்பெண்ணை, பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்.

 

தமிழகத்தில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு தமிழக அரசு சிறப்பு பெறுந் திட்டத்தை உருவாக்க வேண்டும். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தையும், வைகை அணை தூர் வாருவதையும் ஆறுகள் பராமரிப்பு செய்வதையும் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

 

இக்கூட்டத்தில்

இயற்கை வேளாண் ஆளுமை தஞ்சை சித்தர்,

ஏற்றுமதியாளர்

இராஜமூர்த்தி,

விவசாய சங்க தலைவர்கள் மதுரைவீரன்,

எல் அஆதிமூலம், எம் பி ராமன் மேலூர் அருண், பொன் மணிகண்டன் அழகு சேர்வை  தேனி காமராஜ்

சத்தியம் செந்தில் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இயற்கை உழவர்கள் பேராசிரியர்கள் ஆய்வாளர்கள்,

வணிகர்கள்,உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிறைவாக முசிறி யோகநாதன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க