கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான இரட்டை பதவி வழக்கு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட்

 

 

 

சென்னை:ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பதால், எந்த தகுதியின் அடிப்படையில் கவர்னர் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிட்டு அவரை பதவி நீக்கம் செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த மனுவில், ‘ஆரோவில் அறக்கட்டளை சட்டப்படி, தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவருக்கு ஊதியம், படி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்பதால் அவர் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கிறார்.இந்திய அரசியல் சாசனம் 158 (2)-வது பிரிவின்படி, கவர்னர் பதவி வகிப்பவர், ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ஆரோவில் அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து ஆர்.என்.ரவி, கவர்னர் பதவியில் நீடிக்க தகுதி இல்லை’ என்று கூறியிருந்தார்.இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது.கவர்னர் மீது வழக்கு தொடர முடியாது என அரசியல் சாசனம் சட்டப்பாதுகாப்பு வழங்கியிருந்தாலும், அது கவர்னர் என்ற பதவியின் செயல்பாடுகள் தொடர்பானது தான் தனிப்பட்ட முறையில் அவரது செயல்பாடுகள் தொடர்பாக வழக்கு தொடர முடியும்.மேலும், ஆதாயம் தரும் பதவி வகிக்கும் கவர்னர் ரவி, சட்டவிதிகளின்படி கவர்னர் பதவியில் நீடிக்கிறாரா? என விளக்கமளிக்க வேண்டும். சட்டவிதிகளுக்கு முரணாக பதவியில் நீடிப்பதாக இருந்தால் அவரை தகுதி நீக்கம் செய்யலாம் பல மாநிலங்களில் கவர்னர் விளக்கமளிக்க ஐகோர்ட்டுகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறி பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு உகந்தது தானா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலையில் பிறப்பித்தனர் அதில் கவனருக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல அதனால் வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *