நீட் எதிர்ப்பு மசோதாவை ஆதரித்து சட்டசபையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:- நீட் எதிர்ப்பு விவகாரத்தில் அ.தி.மு.க. எப்போதும் உறுதியாக உள்ளது. ஆனால் நீட் தேர்வு அ.தி.மு.க.வால் தான் கொண்டு வரப்பட்டது என்று தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. பொது வெளியில் எங்களை குறை கூறி பேசுகிறார்கள். நீட் தேர்வு எப்படி வந்தது? என்று அனைவருக்குமே தெரியும். அதைத்தான் எங்களது சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கரும் பேசி இருக்கிறார். நீட் தேர்வு தொடர்பாக எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அ.தி.மு.க. முழு ஆதரவு அளிக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.