பெரம்பூரில் 10-ஆம் ஆண்டு திருப்பதி திருமலை திருக்குடை விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு 3 வேளை அன்னதானம், 10 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது!

சென்னை, பெரம்பூர் செம்பியம் பேப்பர் மில்ஸ் சாலையில், திருப்பதி திருமலை திருக்குடை விழாவை முன்னிட்டு 10-ஆம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி இன்று காலை திருப்பதி பக்தர்களுக்கு பொங்கல், வடை, இட்லி உள்ளிட்ட அறுசுவை உணவுகளும், மதிய உணவாக தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி, சுண்டல், புளியோதரை உள்ளிட்ட உணவுகளும் அன்னதானமாக வழங்கப்பட்டன.

மேலும், திருப்பதி பிரசாதமாக 10 ஆயிரம் லட்டுகளும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். கிருஷ்ணசாமி தலைமையில்,
காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் முன்னிலையில் நடைபெற்றது.

திருப்பதி தேவஸ்தானத்திற்கான திருக்குடை ஊர்வலம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருவதுடன், இந்த ஆண்டும் வழிநெடுகிலும் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு திருமலை ஏழுமலையானின் அருளைப் பெற்றனர்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் பேராசிரியர் நாராயணன் வீரப்பன், தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *