தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாகவும்,
மயானத்திற்கு செல்லும் வழிப்பாதை தொடர்பான பிரச்சினை குறித்தும் காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் பத்திரிகை மற்றும் ஊடக பாதுகாப்பு நல சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல வழித்தடம் மறுப்பு? நில உரிமையாளர் மீது குற்றச்சாட்டு மயானப் பாதை விவகாரத்தில் முற்றிய சர்ச்சை – கிராம மக்கள் அதிர்ச்சி!*
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்லும் வழிப்பாதை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் வழிப்பாதை வழியாக சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல நில உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து, இடையூறு ஏற்படுத்தியதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ்7 தமிழ் செய்தியாளர் தீனதயாளனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாகவும், மயானத்திற்கு செல்லும் வழிப்பாதை தொடர்பான பிரச்சினை குறித்தும் காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் பத்திரிகை மற்றும் ஊடக பாதுகாப்பு நல சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சடலங்களை மயானத்திற்கு எடுத்துச் செல்லும் வழிப்பாதையில் தொடர்ந்து ஏற்படும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், பொதுமக்களின் பாதுகாப்பையும் செய்தியாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.