தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
1.05.2022 உழைப்பாளர் தினம் அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
1. – கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும்.
–2. – 2020 – 2021 மற்றும் 2021- 2022 கடந்த நிதியாண்டில் வரவு செலவுகளை ஊராட்சி அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
-3. – 500 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 நபருக்கு மேல் கலந்து வேண்டும். குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உரிமை உண்டு.
-4. – 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் கிராமத்தின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ தீர்மானம் இயற்றவும்.
5. – உங்கள் ஊராட்சியில் எந்த நிமிடம் வரை கிராமசபை தகவல் தெரியவில்லை என்றாலும் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு.
-6. – கிராம சபை கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்வதை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.
-6. – ஊராட்சி மன்ற தலைவர் முன்கூட்டியே கிராம சபை கூட்ட தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும் ஊராட்சி செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
-7. – ஏழு நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
-8. – தமிழக அரசு கிராம சபை கூட்டம் தெரிவித்தும் நடத்தாத ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் அளிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கவும்.
-9. – மாவட்ட ஆட்சியரிடம் கிராம சபை புகார் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் அதிகாரம் பறிக்கப்படும்…*
-10. – கிராம மக்கள் சொல்லும் தீர்மானம் பஞ்சாயத்து தலைவரும் அதிகாரியோ நிராகரிக்க முடியாது தீர்மானம் சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. இதனை அறிந்து செயல்பட வேண்டுகிறேன்.
-கிராம சபை கூட்டம் இல்லை என்றால், உடனடியாக கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
-முதலமைச்சர் தனிப்பிரிவு – எண்… –044 25672345 மற்றும்
044 25672283.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.