சென்னை: லோக்சபாவில் ராகுல் பேசியதை தொடர்ந்து, மத்திய அமைச்சர்களும், பா.ஜ., தேசிய தலைவர்களும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.
லோக்சபாவில் நேற்று முன்தினம், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், ‘பா.ஜ., ஒருபோதும், தமிழக மக்களை ஆட்சி செய்ய முடியாது.

ஆச்சரியம்

‘நீட் தேர்வு தொடர்பாக, தமிழக அரசின் கோரிக்கையை பா.ஜ., அரசு புறக்கணிக்கிறது. மாநில உரிமைகளை மதிப்பதில்லை’ என, ஆவேசமாக பேசினார்.இது தமிழகத்தில் மட்டுமல்லாது, நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல் பிரசாரம் நடந்து வரும் நிலையில், அம்மாநில பிரச்னைகள் பற்றி பேசாமல், தமிழகம் குறித்து ராகுல் பேசியது, மற்ற மாநில தலைவர்களை, குறிப்பாக, பா.ஜ., தலைவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாணவி தற்கொலை

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போல, தமிழக முதல்வர் ஸ்டாலினும் மத்திய பா.ஜ., அரசை கடுமையாக எதிர்த்து வருவதும், தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தை விசாரிக்க, பா.ஜ., குழு அமைத்ததும், தேசிய அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், லோக் சபாவில் ராகுலின் பேச்சு, நாட்டின் பார்வையை, தமிழகம் நோக்கி திருப்பி உள்ளது. மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தேசிய நிர்வாகிகள், மாநில தலைவர்கள், எம்.பி.,க்கள் என்று பலரும் நேற்று முன்தினம் இரவு முதலே, ராகுலின் பேச்சு பற்றி தொலைபேசியில், அண்ணா மலையிடம் விசாரித்து உள்ளனர்.
என்னதான் நடக்கிறது?

‘தமிழகம் குறித்து ராகுல் பேசியதற்கு என்ன காரணம்? தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? 2019ல் கேரளத்தில் போட்டியிட்ட ராகுல், 2024ல் தமிழகத்தில் போட்டியிட திட்டமிடுகிறாரா?’ என்றெல்லாம் அடுக்கடுக்காக கேட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் அளித்த அண்ணாமலை, ‘தனித்து நின்று தமிழகத்தில் ஓரிடத்தில்கூட காங்கிரசால் வெல்ல முடியாது. தி.மு.க., தரும் ஆக்சிஜனால் அது உயிர் வாழ்கிறது. இந்தியாவை ஒரு தேசமாக ஏற்காத, பிரிவினைவாதம் பேசும் கட்சி தி.மு.க., ‘இதுவரை தமிழக சட்டசபையில் தி.மு.க.,வினர் பேசிய பிரிவினைவாத கருத்துகளை, லோக்சபாவில் ராகுல் பேசியுள்ளார். பா.ஜ., தலைவர்கள் மட்டுமல்ல; கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும், அண்ணாமலையை தொடர்பு கொண்டு ராகுலின் பேச்சு குறித்து விசாரித்ததாக, தமிழக பா.ஜ., தரப்பில் கூறப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons