சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை 194 புகார்கள் வந் துள்ளன. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளன.
இந்நிலையில் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து புகார்களைப் பெறுவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் புகார் மையம் கடந்த 27-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
இப்புகார் மையத்தை 18004257072, 18004257073, 18004257074 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இதுவரை 194 புகார்கள் வரப்பெற்றுள்ளன. இந்த புகார்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, உரிய விளக்கங்கள், தகவல்கள் தொடர்புடையவர்களுக்கு உடனுக்குடன் அளிக் கப்பட்டு வருகிறது.
புகார்களின் தன்மைக்கேற்ப, அவை தொடர்புடைய மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த புகார்கள் குறித்து உடனடியாக ஆய்வு செய்து புகார்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.