தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், சென்னையில் இன்று மதியத்தில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. திடீரென பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று காலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது மழையால். சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர், குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.