Category: செய்தி

பொங்கல் திருநாளை முன்னிட்டு, நேற்று முதல் நாளில் சென்னையிலிருந்து1.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக, 16 ஆயிரத்து 932 பேருந்துகள் நேற்று (ஜன. 12) முதல் இயக்கப்படுகின்றன. சென்னை, கோவை, திருப்பூர், சேலம் போன்ற தொழில் நகரங்களில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களுக்கு ஜன.12 முதல் 14-ஆம் தேதி வரையும், ஜன.16 முதல் 18-ஆம் தேதி வரையும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் நாளில்சென்னையிலிருந்து1.34 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது. நேற்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 586 பேருந்துகள் என மொத்தம் 2,686 பேருந்துகளில் 1,34,300 பேர் பயணித்துள்ளனர்.

கடந்த 6 ஆம் தேதி சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பாஜக மாவட்ட துணை தலைவர் ரவி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் கடந்த 6 ஆம் தேதி பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில் முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரத்தின் ஆதரவாளர் ரவி மற்றும் புதிய மாவட்ட தலைவர் அருள் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி இருதரப்பினரிடையே கைகலப்பாக மாறியதில் பாஜக நிர்வாகிகள்ஒருவருக்கொருவர் நாற்காலிகளை வீசி தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்ட துணை தலைவர் ஆரூர் ரவி கட்சியின் கட்டுப்பாட்டை மீறியுள்ளார். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதனால் அவர் பொறுப்பில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார்” என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரபென் மோடி காலமானார். அவருக்கு வயது 100. உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு…

பத்திரிகை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்

பத்திரிகை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு பத்திரிகையாளர் நல சங்கத்தின் ஏற்பாட்டில் பத்திரிகை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை வடபழனியில் சிறப்பாக நடைபெற்றது அதில் 100 க்கும்…

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை: தடைவிதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை புழல் சிறையில்…

வருகிற 23-ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டத்தையும், 2 முறை செயற்குழு கூட்டத்தையும் நடத்திட வேண்டும் என்பது விதி ஆகும். அந்த…

அக்ரி எக்ஸ்போ- 2022 மற்றும் விவசாயிகள் சங்க மாநாடு தொடங்கியது

அக்ரி எக்ஸ்போ- 2022 மற்றும் விவசாயிகள் சங்க மாநாடு தொடங்கியது

மேட்டூா் அணையில் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,000கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும்…

சென்னையில் நாளை மலர் கண்காட்சி – முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி வருகிற ஜூன் 3-ந்தேதி (நாளை)…

மேலும் படிக்க