கோரிக்கைகளை வலியுறுத்தி பி ஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் மாபெரும் உண்ணாவிரதம்!
தமிழக அரசே விவசாயிகளை அவமதிக்காதே! 2021 திமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் முழுமையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்திடு…
கல்வி கடனை தள்ளுபடி செய்திடு.. சுல்தான் இஸ்மாயில் குழு அறிக்கையை உடன் வெளியிடு…
காவிரி டெல்டாவில் பேரழிவு திட்டங்களுக்கு மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் உத்தரவாதம் கொடுத்ததாக ஓஎன்ஜிசி நிர்வாகம் தெரிவிப்பதின் உண்மை நிலையை தெளிவுபடுத்து… அனுமதி தருவோம் என்று முதல்வர்
காவிரி டெல்டாவை விட்டு ஓஎன்ஜிசியை வெளியேற்று… நெல் கொள்முதல் நிலையங்களை தனியாருக்கு தாரை வார்க்காதே…
நெல் குவிண்டால் 1க்கு ரூபாய் 3500/-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 5000/- ம் உடன் வழங்கிடு..
விளைநிலங்களையும், நீர் ஆதாரங்களையும் அபகரிக்கும் தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-யை உடன் திரும்ப பெறு.
தமிழகம் முழுமையிலும் கார்ப்ரேட்டுக்கு தாரை வார்க்க இனாம், அநாதீன நிலங்களையும், கோவில் குத்தகை நிலங்களையும், விவசாயிகளின் விளைநிலங்களையும் அபகரிக்கும் நடவடிக்கையை கைவிடு.
பயிர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்காதே… தேசிய வேளாண் காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்திடு… பாதிக்கப்பட்ட விவசாயிகளுகளுக்கு உடன் இழப்பீடு வழங்கிடு..
பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான இடுபொருள் இழப்பீடு உடன் வழங்கிடு…
ஆகிய கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் விவசாயிகள் பி ஆர் பாண்டியன் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தனர்.