சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் மீனவர் பிரிவு சார்பில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் 166 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி பாஜக மாநில மீனவர் பிரிவு அலுவலக செயலாளர் கே.மூர்த்தி ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக கட்சியின் மீனவர் பிரிவு மாநில தலைவர் சீமான் பாலு தலைமை தாங்கினார்,

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்

இதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றினார். மேலும் அப்பகுதி மீனவ மக்கள் 50 பேருக்கு மீன்பிடிக்க வலைகள் மற்றும் 200க்கும் மேற்பட்டோருக்கு ஹாட் பாக்ஸ் 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அன்னக்கூடைகள் 25க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மிக்சி, இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோருக்கு கிரிக்கெட் மட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட தலைவர் மீனவர் அணி பிரிவு வட சென்னை கிழக்கு சுதாகர், மாநில நிர்வாகிகள், மீனவர் பிரிவு மாநில செயலாளர்கள் கமலக்கண்ணன், பிரேம்குமார், மாவட்டத் தலைவர்கள் மீனவர் பிரிவு வாசுதேவன் ஜெகதீசன் வீர பெருமாள், தாமோதரன் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்து பேசிய போது

தமிழக முதலமைச்சர் ₹5000 உதவித் தொகை அறிவித்து கொடுத்தது ஒரு கண் துடைப்பு. இது தேர்தலுக்காக ஓட்டு வாங்க இந்த அரசியலை செய்துள்ளார்.

இதுபோன்ற அரசியலில் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.
என்ன காரணம் என்று கேட்டால் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சொன்னார்கள் 2021-யில் ₹1000 தருவேன் என்று சொன்னார்கள். ஆனால் பாராளுமன்ற தேர்தல் வரும் வரைக்கும் அவர்கள் அந்த ரூபாயைக் கொடுக்கவே இல்லை என்று குற்றச்சாட்டு முன் வைத்தார்

தேர்தல் வரும்போது தான் கொடுத்து வருகின்றார்கள்
தேர்தலுக்கான அந்த வாக்கு வங்கி அரசியலையும் அதே போன்று பொங்கலுக்கும் சமீபத்தில் 1000 ரூபாய் கொடுக்கப்பட்டது,

ஆனால் கடந்த பொங்கல் பண்டிகை அன்று கொடுக்க வேண்டிய தொகையை , அதுக்கு முந்தினம் கூட தமிழக அரசு தரவில்லை

தேர்தல் வரும்போது அதுக்காக ஒரு திட்டம் மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு திட்டத்தை வைத்து
சமீபத்தில் அறிவித்து இருக்கிறார்கள் .

கோடை காலத்துக்காக 2000 ரூபாய் இந்தியாவில் எந்த மாநிலமும் கொடுக்காத ஒரு திட்டத்தை இன்று தமிழக முதலமைச்சர் கொடுத்து இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

திட்டத்தை கொடுப்பது தவறு இல்லை. கடந்த ஆண்டு ஏன் கொடுக்கவில்லை? கோடைக்கால விடுமுறைக்கு பணம் கொடுக்கவில்லை

ஆக, தேர்தல் வரும்போது மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு திட்டம்.

இந்த தமிழக ஆட்சியில் கஞ்சா,போதை பொருட்கள் கல்லூரிக்கு
புத்தகத்தை சுமக்கும் வேண்டிய பையில் கஞ்சா பொட்டலத்தை சுமக்கிறார்கள்.

பள்ளி பெண்கள் பீர்பாட்டில் குடித்து வருவதாக குற்றம் சாட்டினார். பீர் குடிக்கிற மாதிரியான காட்சிகள் எல்லாம் இன்று சமூக வலைத்தளங்களில் வந்து மிக மோசமான சூழ்நிலையிலெ தமிழ்நாடு போய்க் கொண்டு இருக்கிறது.

இன்று ₹10 லட்சம் கோடி, ₹15 லட்சம் கோடி என இன்றைக்கு கடன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் 5 1/2 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கி தமிழ்நாட்டை கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளனர்.

கடன் வாங்குவதில் இன்றைக்கு இந்தியாவிலேயே நம்ம தமிழ்நாடுதான் முதலிடம். அதுபோல போதைப் பொருட்களில் பார்த்தால் அதில் முதல் மாநிலமா இருக்கிறதும் நம்ம தமிழ்நாடுதான்.

இன்றைக்கு தற்கொலைகள் அதிகமாக நடைபெறுவதும் நம்முடைய தமிழ்நாட்டில் தான்.

இந்தியாவிலேயே அதிகமாக எல்லா நிகழ்வுகளும் நடைபெறுகிறது. மோசமான ஆட்சி, சட்டம்- ஒழுங்கு சரியில்லை. இவ்வளவு மோசமான சூழ்நிலையில் மக்களை ஏமாத்தலாம் என்று நினைக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

 

 

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *