சாலைமறியலில் ஈடுபட்ட
மின்சார தற்காலிக
ஊழியர்கள் குண்டுகட்டாக கைது!

 

சாலைமறியலில் ஈடுபட்ட
மின்சார தற்காலிக
ஊழியர்கள் குண்டுகட்டாக கைது!

சென்னை கோயம்பேடு பகுதி தேர்தல் தலைமை அலுவலகம் எதிரே தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தற்காலிக மின்சார ஊழியர்கள் நேற்று 3 வது நாளாக போராட்டத்தில் தீவிரமடைந்து வருகின்றனர்

தற்போது தங்களுக்கான கோரிக்கைகளாக பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழக அரசுக்கு நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்

பின்னர் குவிக்கப்பட்ட போலீசார்கள் எச்சரிக்கை விடுத்தும் மின்சார தற்காலிக ஊழியர்கள் சாலை மறியலைக் கைவிடாததால் போலீசார்கள் அவர்களை குண்டு கட்டாக கைது செய்தனர்.

மேலும் போலீசார் கைது செய்த மின்சார தற்காலிக ஊழியர்களை சமூக கூடத்தில் போலீசார் அடைத்து வைத்தனர்.

போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் 5க்கும் மேற்பட்ட மின்சார தற்காலிக ஊழியர்கள் மயங்கிய நிலையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோரிக்கைகள்:

1) 05/0/1998 ல் விடுபட்ட ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு களப்பணியாளர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

2) மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்று பணி ஆணை வைத்திருக்கும் 6788 நபர்களுக்கு நிலுவைத் தொகையுடன் மற்றும் வழக்கு தொடுத்த அனைவருக்கும் பணி ஆணை வழங்க வேண்டும்.

3) மின்வாரியத்தால் உருவாக்கப்பட்ட K-2 ஒப்பந்தத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.

4) வடசென்னை எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் உற்பத்தி மற்றும் நீர்மின் உற்பத்தி நிலைய ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.

5) பகுதிநேர ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.

6) மின்சாரபணி செய்யும் பொழுது உயிரிழந்த 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளித்து அவர்களின் வாரிசுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

7) மின்வாரியத்தில் K-2 ஒப்பந்ததாரர்கள் மின் பணியை முடித்துக் கொடுத்தும் அவர்களுக்கு பல ஆண்டுகளாக வர வேண்டிய பில் தொகை வாரியம் வழங்கவில்லை; அவர்களுக்கு உடனே பில் தொகை வழங்க வேண்டும் வேண்டும்.

8) கேங்மேன் தோழர்களின் பிள்ளைகளுக்கு தந்தையின் முகம் மறந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளதால் மின்சார வாரியத்தில் பணிபுரியும் 9627 கேங்மேன் ஊழியர்களுக்கு சொந்த மாவட்டத்தில் சொந்த ஊரில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.

9) ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் தனியார் ஒப்பந்தத்தில் அனைத்து பிரிவு பொறியாளர்கள் இந்த ஒப்பந்தத்தில் பணியமர்த்த அதிகாரிகளின் துணையுடன் அனுபவம் இல்லாதவர்களிடம் 50,000 முதல் 1 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு பணியில் அமர்த்துகிறார்கள். அதிகாரிகள் அவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு வேண்டப்பட்ட நபர்களை பணி அமர்த்துகிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். ஓவர்சீஸ் மேன் பவர் கார்ப்பரேஷன் தொழிலாளர்களுக்கு எதிரானது. இதை உடனே ரத்து செய்ய வேண்டும் ஆகிய 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது

மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றும் பேச்சுவார்த்தை உடன்படாததால் தான் சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *