தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் இன்று மாபெரும் காத்திருப்பு போராட்டம் மாநிலத் தலைவர் ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்று வருகிறது.
மாநிலச் செயலாளர் கலைவாணன், மாநில பொருளாளர் செல்வ சுந்தரி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் முக்கிய கோரிக்கை தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்புற பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் செய்யப்படும் பணி புதுப்பித்தல் முறையை கைவிட வேண்டும், பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய, காலம் முறை ஊதிய வழங்க வேண்டும்.
மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு உடனடியாக வழங்க வேண்டும், பணிக் காலத்தில் இறந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு முறையான இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.