சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாசலில் அமர்ந்து அமைதியான முறையில் 17 ஆம் நாள் போராட்டத்தில் ஈடுபட்ட 2500, இடைநிலை ஆசிரியர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த சாலையே ஸ்தம்பித்தது!
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் “சம வேலைக்கு சம ஊதியம்” என்னும் கடந்த தேர்தல் வாக்குறுதி எண் 311ஐ நிறைவேற்றக் கூறி 17 ஆம் நாளாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கேட்கவில்லையா கேட்கவில்லையா இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோருவது கேட்கவில்லையா?
தமிழக அரசே ஒற்றைக் கோரிக்கை கேட்கவில்லையா? என கோஷமிட்டபடி வந்ததும்
பூக்கடை மாவட்டத் துணை ஆணையர், கீழ்ப்பாக்கம் மாவட்ட துணை ஆணையர் கீதா, திருவல்லிக்கேணி மாவட்டத் துணை ஆணையர் சௌந்தர்ராஜன் ஆகியோர்
தலைமையில் 650 போலீசார் குழுவாக ஒன்றிணைந்தும்,
ஒரு சில போலீசார் சீருடை அணிந்தும் பேட்ச் அணியாமலும், ஒரு சில போலீசார் சீருடை அல்லாமல் சாதாரண உடையில் இருந்தும், ஒரு சிலர் சீருடையில் போலீசார்கள் இணைந்து
இடைநிலை ஆசிரியர்களை தாக்குதல் ஏற்படுத்தி கைது நடவடிக்கைகள் எடுப்பதாக இடைநிலை ஆசிரியர்கள்
குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.
மேலும் கூட்ட நெரிசலில் சுமார் 2500 இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு 13 அரசு பேருந்துகளிலும் 8 காவல்துறை வாகனங்களிலும் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்,
போதிய அளவிற்கு ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லாதால் ஏராளமான இடைநிலை ஆசிரியர்கள் மயங்கிய நிலையில் சாலையில் படுக்க வைக்கப்பட்டு இருந்தனர் ,
மேலும் அழைத்து சென்று ஆங்காங்கே இருக்கும் சமூக கூடத்தில் அடைத்து வைத்து கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பிறகு மாலை விடுவிப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலால் அந்த சாலையே ஸ்தம்பித்தது குறிப்பிடத்தக்கது.