சம்யுத்த கிசான் மோர்ச்சா (அரசியல்சார்பற்றது) SKM (NP)தமிழக நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் இன்று நடைபெற்றது
. கூட்டத்திற்கு தமிழக ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன் தலைமையற்றார்.தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜீத் சிங் தல்லேவால்,
இணை ஒருங்கிணைப்பாளர் அபிமன்யு
கொஹார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
ஜக்ஜித் சிங் தல்லேவால் செய்தியாளர்களும் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் விவசாயிகள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது. விவசாயிகளின் விளைநிலங்கள் அபகரிப்பு மற்றும் பேரழிவு திட்டங்கள் சட்டத்திற்கு புறம்பாக நிறைவேற்ற துணை போகிறார்கள்.
ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் உள்ளிட்ட பல்வேறு பேரழிவு திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு துணை போகிறது. ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இத்திட்டங்களுக்கு எதிராக போராடும் பி ஆர் பாண்டியன் செல்வராஜ் உள்ளிட்ட போராளிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டு 13 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறாம் தேதி சிறை தண்டனை விதிக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். உடனடியாக தேசிய அளவிலான கூட்டத்தை இணையவழி தளத்தில் நடத்தினோம். இந்தியா முழுமையிலும் போராட்டத்தை தீவிர படுத்தினோம். கடந்த டிசம்பர் 18ஆம் தேதி இந்தியாவில் ஹரியானா, பஞ்சாப்,கர்நாடகா உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
குடியரசுத் தலைவர் உடனடியாக தலையிட வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
உடனடியாக முடிவெடுக்காவிட்டால் டெல்லி சந்தர்ப்பங்களில் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் ஒன்று திரட்டி தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை செய்யப்பட்டது.
மத்திய அரசின் அதிகாரிகள் எங்களோடு தொடர்பு கொண்டு விடிவிப்பதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக உறுதியளித்தனர்.
இந்நிலையில் 19ஆம் தேதி விடுவிக்கப்பட்டுள்ளார்.இவரது நீதிமன்ற நடவடிக்கைகளில் அதிகாரமிக்க அரசியல்வாதிகளின் தலையீடுகள் இருந்ததாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுமையிலும் வழக்கு
குறித்து சட்ட வல்லுநர்களோடு தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்.அவர் மீதான வழக்கை ரத்து செய்வதற்கு தமிழக முதலமைச்சர் அவசர
நடவடிக்கைகளைமேற்ககொள்ள வேண்டும்.
தொடர்ந்து விவசாயிகள் மீது தமிழக அரசின் தாக்குதல்கள் தொடருமேயானால் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளை ஒருங்கிணைத்து தமிழகத்தில் தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என எச்சரிக்கிறேன் என்றார்.மேலும் காவிரி டெல்டாவில் ஓ எம் ஜி சி பேரழிவு குறித்த ஆய்வு செய்வதற்காக 2021 இல் அமைக்கப்பட்ட சுல்தான் இஸ்மாயில் குழு அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைக்க தமிழக அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக வெளியிட வேண்டும்.உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
பிஆர்.பாண்டியன் சிறையில் அடைக்கப்பட்டதும், தொடர்ந்து கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பேரழிவு திட்டங்களை ஆதரிப்பதும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவிளை நிலங்களை அபகரிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. கார்ப்பரேட்டுகளின் பங்குதாரர்கள் தமிழக அமைச்சரவையில் அமைச்சராக இடம் பெற்றுள்ளார்களோ? என்று அஞ்ச தோன்றுகிறது. எனவே இது குறித்து தமிழக முதலமைச்சர் விரிவான விசாரணை செய்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
2021 ஆம் ஆண்டு சுல்தான் இஸ்மாயில் தலைமையில் காவிரி டெல்டாவில் ஏற்பட்டிருக்கிற பேரழிவுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைப்பது ஏன்? என விவசாயிகள் மத்தியில் தமிழக அரசின் மீது மிகுந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பிஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது:
எம் எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரை நிறைவேற்றுவது, வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக வரும் ஜனவரி 8ஆம் தேதி டெல்லியில் பல்வேறு மாநிலங்களின் நிர்வாகிகள் பங்கேற்கும் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.அதற்குப் பிறகு பிப்ரவரி முதல் வாரத்தில் கன்னியாகுமரியில் விவசாயிகள் யாத்திரை புறப்பட்டு காஷ்மீரில் பிப்ரவரி முதல்வாரம் நிறைவடைய உள்ளது.அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்களை சந்தித்து இது குறித்து வலியுறுத்த உள்ளோம்.
மேலும் பிப்ரவரி 19ஆம் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது என்றார்.
கிருஷ்ணகிரி ராம கவுண்டர் பேசும்போது.
பி ஆர் பாண்டியன் மீதான கைது நடவடிக்கை ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அனைத்து விவசாயிகளும் ஒன்றுபட்டு போராடி இருக்கிறோம். சட்டத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது.விவசாயிகள் உரிமையை கார்ப்பரேட்டுகள் அபகரிக்க முதலமைச்சர் அனுமதிக்க கூடாது. திமுக அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுகிறது. இதே நிலை நீடித்தால் தேர்தல் களத்தில் விவசாயிகள் திமுகவுக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்க நேரிடும் என எச்சரிக்கிறேன் என்றார்.
கர்நாடகாவைச் சார்ந்த நாகராஜ், தேவராஜ் ,தமிழக இணை ஒருங்கிணைப்பாளர்கள் கோவை ஏ எஸ் பாபு,மதுரை எல்.ஆதிமூலம் திருவாரூர் KS.பாலு,தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தென் மண்டல தலைவர் கட்டிக்குளம் மாணிக்கவாசகம்,மாநில அமைப்பு செயலாளர் எஸ் ஸ்ரீதர், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் திருப்பதி வாண்டையார் / தஞ்சை மண்டல தலைவர் துரை பாஸ்கரன், திருவாரூர் மாவட்ட தலைவர் சுப்பையன், செயலாளர் சரவணன்,கௌரவ தலைவர் செல்வராஜ், நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் புலியூர்பாலு,செயலாளர் வேதைகருணை நாதன்,தஞ்சாவூர் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் / செயலாளர் பிரபாகரன், இளைஞரணி மாநில செயலாளர் ஒக்கநாடு மகேஸ்வரன், தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் சதீஷ்,|கடலூர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், தலைவர் அன்பழகன்,உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்,