மிக்ஜாம் புயலால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதலே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனிடையே, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவந்தது. இந்த நிலையில்,தொடர் கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிக்கு வரும்நீர்வரத்து விநாடிக்கு5,304 கன அடியாக அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவான 24 அடியில், 21 அடியை எட்டியுள்ளது. ஏரியிலிந்துவிநாடிக்கு 3,162 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஏரியின் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஏரியின்நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரிக்குநீர்வரத்து விநாடிக்கு 3,950 கன அடியாக அதிகரித்துள்ளது. 35 அடி நீர்மட்டம் கொண்ட பூண்டி ஏரியில், நீர்மட்டம் 32.20 அடியாக உயர்ந்துள்ளது. ஏரியில்2,580 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று(டிச.3) காலை 8.30 மணி தொடங்கி, இன்று(டிச.4) காலை 5.30 மணி நிலவரப்படி, அதிகபட்ச மழைப்பொழிவாக சென்னை வளசரவாக்கத்தில் 195.9 மி.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.