நிலவை வென்று விட்டோம். நாட்டு மக்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தார்.
தென் ஆப்ரிக்காவுக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கிருந்து சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை பார்வையிட்டார். வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் தரையிறங்கியதும் தேசியக்கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது: நிலவை வென்று விட்டோம். நாட்டு மக்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. வெற்றிக்கு உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள். சந்திரயான் -3 ஒட்டு மொத்த மனித குலத்திற்கு கிடைத்த வெற்றி. நமது கண்முன்னே இந்தியா வல்லரசாகி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் புதிய இந்தியா உருவாகி உள்ளது. இந்த நாளை நாடு எப்போதும் நினைவில் வைத்திருக்கும். இந்த தருணம் 140 கோடி மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தருணம்.
இந்தியா நிலவில் காலடி எடுத்து வைத்துள்ளது ஒட்டு மொத்த மக்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்தியாவின் வெற்றியை உலக நாடுகள் பார்த்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு பிரதமர் வாழ்த்து செய்தியில் தெரிவித்து உள்ளார்.
டிரெண்டிங்கில் ‛டாப்’
சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.