ராகுலின் பாதயாத்திரை நிறைவு விழாவில், முதல்வர் ஸ்டாலின் உட்பட, 21 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில், பிரதமர் வேட்பாளராக ராகுல் பெயரை, முதல்வர் ஸ்டாலின் வாயிலாக முன்மொழிய வைக்க, காங்., மேலிடம் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. காங்., முன்னாள் தலைவர் ராகுல், கடந்த செப்.,7ல், கன்னியாகுமரியில் நாடு தழுவிய நடைபயணத்தை துவக்கினார். நடைபயணத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, ம.பி., ராஜஸ்தான், டில்லி, உ.பி., அரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக, யாத்திரை தற்போது பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றுள்ளது. இதுவரை, 3,300 கி.மீ.,க்கு மேல் நடைபயணத்தை ராகுல் மேற்கொண்டுள்ளார். காஷ்மீரில் இம்மாதம், 30ம் தேதி நடைபயணம் நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில், ராகுல் தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். நிறைவு விழாவில் பங்கேற்குமாறு, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்; ஒருமித்த கருத்து கொண்ட, 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். ஆம் ஆத்மி, ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர்., காங்., உள்ளிட்ட சில கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை. தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக காங்., நிர்வாகிகள் கூறியாதாவது: பிரதமர் வேட்பாளராக ராகுல் பெயரை முதல்வர் ஸ்டாலின், காஷ்மீரில் முன்மொழிந்தால், தேசிய அளவில் கன்னியாகுமரி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தும். ராகுலை டில்லி மேலிட தலைவர்கள் சிலர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, பிரதமர் வேட்பாளர் அறிவிப்பை வெளியிட வைக்கும் வகையில் பேச்சு நடத்த உள்ளனர். ‘ராகுல் நடைபயணம் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளது; காங்கிரஸ் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது’ என்றெல்லாம் முதல்வர் ஸ்டாலின் பாராட்டி பேசியுள்ளார். அவர், பிரதமர் வேட்பாளராக ராகுல் பெயரை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழலில், ராகுலை பிரதமர் வேட்பாளர்களை அறிவிப்பதை முதல்வர் ஸ்டாலின் தவிர்ப்பார் என்றால், அவருக்கு பதிலாக, துணை பொதுச் செயலர் கனிமொழியை அனுப்பி வைக்க வாய்ப்பு உள்ளது. காங்கிரசை கூட்டணியில் இருந்து ‘கழற்றி’ விட வேண்டும் என்பதற்காகவே, கவர்னர் வாயிலாக, தமிழக அரசுக்கு நெருக்கடி அளிக்கப்படுகிறது. இருப்பினும், கூட்டணி தர்மத்தை மதிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் நல்ல முடிவு எடுப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர். – நமது நிருபர் – Better luck next time.. வடக்கன் ஹிந்திக்காரன் பனி பூரி பீட தான் வருங்கால பிரதமரா ?? …ஏன் ஒரு தமிழனை வருங்கால பிரதமர் என்று அறிவிக்க கூடாதா ??….தமிழனுக்கு அந்த தகுதியில்லையா ??…தமிழன் என்ன இளிச்சவாயனா?? ??…..இந்தியாவிலேயே முதல் மாநிலம் …இந்தியாவுக்கே சோறு போடும் மாநிலம் …ஆனால் வருங்கால பிரதமர் என்று திராவிடன் ஹிந்திக்காரனை அறிவிக்கனுமா .??.. ஐயகோ தமிழகமே ! சொல்ல சொல்லுங்க சார். போன தடவையும் இவர் மட்டும்தான் சொன்னார். அப்படியே இந்த முறையும் 325 சீட்டுகள் கிடைக்க வழிவகை செய்யும். அதே சமயத்தில் பகுத்தறிவு கட்சிக்கும் இங்கே அமோக வெற்றி கிடைக்கும். ஏம்பா நீங்க நடத்துற காமடிக்கு அளவே இல்லையா? கட்சி தலைவருக்கு ஒத்துவராத ஆளை நாட்டின் பிரமதராக என்ன தகுதி உள்ளது. ராகுலுக்கு கனவு காண தகுதி உள்ளது.

Byadmin

Jan 13, 2023

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons