உழவர் பெருமகனார் ஐயா நாராயணசாமி நாயுடு அவர்களின் 38 வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை பெசன்ட்நகர் அலுவலகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்னை மண்டல தலைவர் வி கே வி துரைசாமி தலைமையற்றார் செயலாளர் சைதை ப.சிவா வரவேற்றார். தலைவர்
பிஆர்-பாண்டியன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் பயரி கிருஷ்ணமணி, திருவாரூர் பழனிவேல்திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ராஜசேகர் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் நமச்சிவாயம், செயலாளர் சிதம்பரம்.
திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் சண்முகம், தலைவர் கார்த்தி, பயரி சிவா,குடவாசல் ராஜா உள்ளிட்ட முன்னணி விவசாயிகள் பங்கேற்றனர்.