பாலியல் தொல்லை மற்றும் வன்கொடுமை கொடுத்து வரும் கீழ்க்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை வேண்டி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு
ஐயா, எனது கணவர் கார்த்திகேயன் ஆறு மாதங்களுக்கு முன்பாக புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார். அது முதல் என் கணவர் வீட்டில் எனது 3 குழந்தைகளுடன் வசித்து வந்தேன். இந்த நிலையில் என் கணவரின் தந்தை மாமனார் சுந்தரமூர்த்தி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். என்னோடு இணங்கி இணக்கமாக இருந்தால் உன்னை ராணி போல் வாழவைப்பேன் இல்லை எனில் உன்னையும் உன் குழந்தையும் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார். இரவு நேரங்களில் போன் அபாசமாக பேசி என்னை திட்டினார். இதனை நான் என்னுடைய செல்போனில் பதிவு செய்து வைத்து உள்ளேன்.
இது சம்மந்தமாக கடந்த 08.04.2022- அன்று நெல்லிக்குப்பம் காவல் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மாமனார் அவரது ஆசைக்கிணங்கவில்லை என்று என் தலையினை பிடித்து இரும்பு கேட்டில் இடித்ததால் என் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது நான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றேன். மேலும், 19.05.2022 அன்று காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் புகர் ஒன்று கொடுத்தேன். அவர்கள் புகார் பதிவு செய்து பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். என்னையும் பண்ருட்டி மகளிர் காவல் நிலையம் செல்லுமாறு கூறினார்கள். நானும் பண்ருட்டி சென்று மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், காவல்துறை ஆய்வாளர், பாலியல் தொல்லை கொடுத்தார் என்பதற்கு சாட்சி இருக்கிறதா என்று கேட்டார். மேலும், அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, போ நான் கூப்பிடும் போது வா என்று கூறி அனுப்பி வைத்தனர். மாறாக இது குடும்ப சண்டை நீ வீட்டிற்கு செல் என்று கூறிவிட்டார்.
பின்னர் எனது எனது மாமனார் ”நெல்லிக்குப்பம் காவல்நிலையத்தில் ரூபாய். 25,000 கொடுத்துவிட்டேன், என்னை உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது” என்று மிரட்டுகின்றார். எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. நாங்கள் உணவுக்கே மிகவும் கஷ்டப்படுகிறோம். அவரே எனது மாமா மற்றும் மருமகன்கள், பொண்ணப்பன், ஜெகன், மைத்துனர் செந்தில் ஆகியோரும் என் மாமனாருக்கு இணக்கமாக போகவில்லை என்பதால் பாத்திரங்களை வெளியே தூக்கி போட்டு விடுவேன் என்றும் மிரட்டுகின்றனர். இப்பொழுது எங்கள் ஊரின் முன்னாள் கவுன்சிலர் கவாஸ்கர் மற்றும் அவரது அப்பா சீத்தாராமன் ஆகியோர் எனது மாமனாருடன் சேர்ந்து என்னை மிகவும் மிரட்டுகின்றனர். மேலும், கந்துவட்டி சீத்தாராமன் என்பவர்மாமனாருக்கு 5 லட்சம் பணம் கொடுத்ததாகவும் அந்த பணத்தை நீ கொடு இல்லை என்றால் இந்த ஊரில் இருக்க முடியாது என்றும் என்னை மீறி உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது என்றும் சீத்தாராமன் என்னை மிரட்டுகிறார்.
சீத்தாராமன் மிகவும் பணபலம் படைத்தவர், அடியாட்கள் அதிகம் அவரிடம் உள்ளது. எனவே, எனக்கும் எனது குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணருகிறேன். ஆனால், எனது மாமனார் சீத்தாராமனிடம் 1 ரூபாய் கூட வாங்கவில்லை. எனவே மீதம் இருக்கும் எனது ஒரு வீட்டை அபகரிக்கவே சீத்தாராமன் இப்படி எனக்கு தொல்லைக் கொடுக்கிறார். சாப்பாட்டுக்கே வழி இல்லாத என்னிடம் எனது மாமனார் வாங்கியதாக கூறும் பொய் கடன் 5 லட்சம் பணம் கேட்டால் நான் எப்படி கொடுப்பேன் எனக்கு சம்மந்தமில்லாத இப்பிரச்சனையை எனது மாமனார் ஏற்படுத்தியுள்ளார். எனது மாமனார் பாலியல் தொல்லை ஒருபுறமும் சீத்தாராமனின் பொய் கடனான 5 லட்சம் பணம் கேட்கும் தொல்லை மறுபுறமும் இருக்கிறது. ஒரு பெண் என்றும் பார்க்காமல் என்னை இவ்வாறு கொடுமை செய்யும் சுந்தரமூர்த்தி, சீத்தாராமன், பொண்ணப்பன், ஜெகன், செந்தில் இந்த ஐந்து பேரிடம் இருந்து என்னையும் எனது குழந்தைகளையும் காப்பாற்றுமாறும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.