கழுதை மேய்ச்சாலும் கவர்மெண்ட் கழுதையை மேய்க்கனும் என்பார்கள் அது போல பேரு தான் அரசாங்க கம்பெனி.ஆனா ஒன்னுத்துக்கும் புண்ணியம் இல்ல 4ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்யவே வழி இல்ல இதுல எங்க இருந்து 5ஜி வரப்போகுது?" என்று பிஎஸ்என்எல் நிறுவனத்தை பார்த்து நக்கல் அடித்தவர்கள் எல்லாம்.. 'கப்சிப்' என்று அடங்கிப்போகும் அளவிற்கு ஒரு தகவல் வெளியாகி உள்ளது! அதென்ன தகவல்? பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நேர்மையை பற்றியும், பொறுமையை பற்றியும் பேசும் அளவிற்கு அப்படி என்ன நடந்துள்ளது? இதோ விவரங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இருக்கும் நிதி நெருக்கடிகள், அதன் மீதான புறக்கணிப்புகள், ஒரவஞ்சனைகள் மற்றும் விமர்சனங்களை பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை.இருந்தாலும் கூட இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக எப்படியாவது 4ஜியை அறிமுகப்படுத்தி விட வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து வருகிறது.அந்த முயற்சிக்கும், BSNL நிறுவனத்தின் நேர்மைக்கும், பொறுமைக்கும் ஒரு மகத்தான பரிசு கிடைத்துள்ளது. அதை ஒரு பரிசு என்று கூறுவதை விட பெருமை என்றே கூறலாம்; அதுவும் பல கோடிகளை கொட்டும் அம்பானிக்கும், மிட்டலுக்கும் கூட கிடைக்காத ஒரு பெருமை BSNL-க்கு கிடைத்துள்ளது! உள்நாட்டு உபகரணங்களுடன் 4ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தும் முதல் இந்திய தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர் என்கிற பெருமையை பிஎஸ்என்எல் சொந்தமாக்கி கொள்ள உள்ளது. இந்த பெருமை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவிடமும் இல்லை சுனில் பார்தி மிட்டலின் ஏர்டெல் நிறுவனத்திடமும் இல்லை!நினைவூட்டும் வண்ணம், 4ஜி நெட்வொர்க்கிற்கான உபகரணங்களை இந்திய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுமாறு, பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் அரசாங்கம் கேட்டுக் கொண்டது. அரசாங்கத்தின் உத்தரவை மிகச்சரியாக செய்ததன் விளைவாகவே BSNL-க்கு இப்படி ஒரு பெருமை கிடைத்துள்ளது! பிஎஸ்என்எல் நிறுவனம், இந்தியா முழுவதும் தனது 4ஜி சேவைகளை வெளியிட டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் (Tata Consultancy Services - TCS) உதவியைப் பெற போகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க்கை மட்டுமல்ல, 5ஜி நெட்வொர்க்கை வெளியிடவும் கூட டிசிஎஸ் நிறுவனம் உதவலாம். அதாவது தேஜாஸ் நெட்வொர்க்குஸ் (Tejas Network) மற்றும் டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (Centre for Development of Telematics) ஆகியவற்றை உள்ளடக்கிய TCS தலைமையிலான கூட்டமைப்பு BSNL 5G வெளியீட்டிற்கும் கூட கைகொடுக்கலாம். ஆக நேரம் பார்த்து தட்டி தூக்கிய பிஎஸ்என்எல் நிறுவனம்.

கழுதை மேய்ச்சாலும் கவர்மெண்ட் கழுதையை மேய்க்கனும் என்பார்கள் அது போல பேரு தான் அரசாங்க கம்பெனி.ஆனா ஒன்னுத்துக்கும் புண்ணியம் இல்ல 4ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்யவே வழி இல்ல இதுல எங்க இருந்து 5ஜி வரப்போகுது?" என்று பிஎஸ்என்எல்  நிறுவனத்தை பார்த்து நக்கல் அடித்தவர்கள் எல்லாம்.. 'கப்சிப்' என்று அடங்கிப்போகும் அளவிற்கு ஒரு தகவல் வெளியாகி உள்ளது!
அதென்ன தகவல்?                  பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நேர்மையை பற்றியும், பொறுமையை பற்றியும் பேசும் அளவிற்கு அப்படி என்ன நடந்துள்ளது? இதோ விவரங்கள்
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இருக்கும் நிதி நெருக்கடிகள், அதன் மீதான புறக்கணிப்புகள், ஒரவஞ்சனைகள் மற்றும் விமர்சனங்களை பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை.இருந்தாலும் கூட இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக எப்படியாவது 4ஜியை அறிமுகப்படுத்தி விட வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து வருகிறது.அந்த முயற்சிக்கும், BSNL நிறுவனத்தின் நேர்மைக்கும், பொறுமைக்கும் ஒரு மகத்தான பரிசு கிடைத்துள்ளது. அதை ஒரு பரிசு என்று கூறுவதை விட பெருமை என்றே கூறலாம்; அதுவும் பல கோடிகளை கொட்டும் அம்பானிக்கும், மிட்டலுக்கும் கூட கிடைக்காத ஒரு பெருமை BSNL-க்கு கிடைத்துள்ளது!
 உள்நாட்டு உபகரணங்களுடன் 4ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தும் முதல் இந்திய தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர் என்கிற பெருமையை பிஎஸ்என்எல் சொந்தமாக்கி கொள்ள உள்ளது. இந்த பெருமை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவிடமும் இல்லை சுனில் பார்தி மிட்டலின் ஏர்டெல் நிறுவனத்திடமும் இல்லை!நினைவூட்டும் வண்ணம், 4ஜி நெட்வொர்க்கிற்கான உபகரணங்களை இந்திய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுமாறு, பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் அரசாங்கம் கேட்டுக் கொண்டது. அரசாங்கத்தின் உத்தரவை மிகச்சரியாக செய்ததன் விளைவாகவே BSNL-க்கு இப்படி ஒரு பெருமை கிடைத்துள்ளது!
 பிஎஸ்என்எல் நிறுவனம், இந்தியா முழுவதும் தனது 4ஜி சேவைகளை வெளியிட டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் (Tata Consultancy Services - TCS) உதவியைப் பெற போகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க்கை மட்டுமல்ல, 5ஜி நெட்வொர்க்கை வெளியிடவும் கூட டிசிஎஸ் நிறுவனம் உதவலாம். அதாவது தேஜாஸ் நெட்வொர்க்குஸ் (Tejas Network) மற்றும் டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (Centre for Development of Telematics) ஆகியவற்றை உள்ளடக்கிய TCS தலைமையிலான கூட்டமைப்பு BSNL 5G வெளியீட்டிற்கும் கூட கைகொடுக்கலாம். ஆக நேரம் பார்த்து தட்டி தூக்கிய பிஎஸ்என்எல் நிறுவனம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons