புனிதமான புத்தாண்டு தினத்தையொட்டி இனிய நல்வாழ்த்துகள்.
இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும், நல்ல ஆரோக்கியமும் நிறைந்திருக்க நான் பிரார்த்திக்கிறேன். சிறப்புமிக்க இந்த நாள் புதுப்பித்தல், நம்பிக்கை மற்றும் புதிய பண்பாட்டின் பெருமையைப் போற்றும் ஒரு தருணமாகும். அதன் இலக்கியம், இசை, கலை, தத்துவம், பக்தி ஆகியவற்றின் வளமான பாரம்பரியம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குத் தொடர்த்து உத்வேகம் அளிக்கிறது.
சிறப்புமிக்க இந்த நாள் நமது சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கட்டும் மகத்தான தமிழ்ப் பண்பாட்டால் உத்வேகம் பெற்று நாம் வெற்றியின் புதிய சிகரங்களை அடைவதோடு, இயற்கையுடனான நமது பிணைப்பையும் ஆழப்படுத்திக் கொள்வோம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
#பிரதமர் மோடி
#prime minister Modi