சென்னை, அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும்
இவரது தேனாம்பேட்டையில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது
அடுத்து முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை திலகம் என்ற பொறியாளர் வீட்டிலும் இந்த சோதனை நடந்து வருகிறது
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
அவரது அலுவலகம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை துப்பாக்கி ஏந்திய போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்
ஒவ்வொரு இடத்திலும் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்களுடன் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், தி.மலை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் விளாத்திகுளத்தில் சோதனையில்
சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரில் இந்த சோதனை என தகவல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது