வங்கக்கடலில், அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, இரண்டு நாட்களில் புயலாக வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தமானின் தெற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, வங்க கடலின் தென் கிழக்கு பகுதிக்கு நகர்ந்து, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
அத்துடன், இரண்டு நாட்களில் வடமேற்கில் நகர்ந்து, தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறும். இதன் நகர்வுகள் கண்காணிக்கப்படுகின்றன.
இதற்கிடையில், இலங்கையின் தெற்கில், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும்.
டெல்டா மற்றும் சென்னையை ஒட்டிய வடகிழக்கு மாவட்டங்களில், இன்று முதல் வரும், 1ம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அந்தமானின் தெற்கு, தென் கிழக்கு, வடக்கு பகுதிகள்; வங்க கடலின் தென் கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில், மணிக்கு, 70 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
எனவே, டிசம்பர், 2ம் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம், ஆந்திரா கடற்பகுதியை நோக்கி புயல் நகர வாய்ப்புள்ளதால், தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு தரப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் துறைமுகங்களுக்கும், புயல் ‘அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், கடலுார் மயிலாடுதுறை, நாகை திருவாரூர், தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம், புதுச்சேரி, துாத்துக்குடி, காரைக்கால். மாவட்டங்களில் கன மழை பெய்யும். அத்துடன், இரண்டு நாட்களில் வடமேற்கில் நகர்ந்து, தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறும். இதன் நகர்வுகள் கண்காணிக்கப்படுகின்றன.
இதற்கிடையில், இலங்கையின் தெற்கில், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும்.
டெல்டா மற்றும் சென்னையை ஒட்டிய வடகிழக்கு மாவட்டங்களில், இன்று முதல் வரும், 1ம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அந்தமானின் தெற்கு, தென் கிழக்கு, வடக்கு பகுதிகள்; வங்க கடலின் தென் கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில், மணிக்கு, 70 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
எனவே, டிசம்பர், 2ம் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம், ஆந்திரா கடற்பகுதியை நோக்கி புயல் நகர வாய்ப்புள்ளதால், தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு தரப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் துறைமுகங்களுக்கும், புயல் ‘அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், கடலுார் மயிலாடுதுறை, நாகை திருவாரூர், தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம், புதுச்சேரி, துாத்துக்குடி, காரைக்கால். மாவட்டங்களில் கன மழை பெய்யும்.