தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500, ரூ.500க்கு காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என தெலுங்கானாவில் காங்.,எம்.பி ராகுல் தாராளமாக வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பேசியதாவது:

மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், அசாம், உத்தரப்பிரதேசம் என, காங்கிரஸ் எந்த தேர்தலில் போட்டியிட்டாலும் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தங்களது வேட்பாளர்களை களம் இறக்குகிறார். அவரது கட்சி பாஜ.,வை ஆதரிக்கிறது. பாஜ.,விடம் இருந்து அவர்கள் பணம் வாங்குகிறார்கள். ஓவைசி 24 மணி நேரமும் பாஜ.,வுக்கு உதவி செய்யுங்கள்.

அவர் (சந்திரசேகர் ராவ்) முதல்வர் பதவியில் இருந்து விடைபெறுவார். பிறகு, தெலுங்கானா மக்களிடம் கே.சி.ஆர் கொள்ளையடித்த பணம் குறித்து கேள்வி கேட்போம்.

முதல்வரால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்டு மக்களின் நலனுக்காக செலவிடுவேன். நான் பிரதமர் நரேந்திர மோடி அல்ல. நான் ஏதாவது வாக்குறுதி அளித்தால் அதை நிறைவேற்றுவேன்.

தெலுங்கானாவில் ஏழை மக்கள், விவசாயிகள் உள்ளனர். ஆனால் ஒருவரும் அவரது குடும்பமும் தெலுங்கானாவை ஆட்டிப் படைக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் தெலுங்கானா பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.2,500 செலுத்தப்படும். சமையல் காஸ் சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும். இவ்வாறு ராகுல் பேசினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons