நடந்த விபரீதம் குறித்து கணவன் இல்லாததால் அவரது மனைவியையும், மகனையும் சென்னைக்கு அழைத்து செல்வதாக கூறி விக்கிரவாண்டி சாலையில் உள்ள லாட்ஜில் ரூம் போட்டு புகார்தாரரை அருகில் வைத்து அடித்து சித்திரவதை செய்ததோடு மகன் மீது கஞ்சா வழக்கு போட்டு விடுவதாக மிரட்டல் விடுத்த பெண் ஆய்வாளர் மீது டிஜிபி அலுவலகத்தில் ஒரு பெண் புகார் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த வாணிப்பிரியா என்பவர் திருமணம் முடிந்து கணவனுடன் நல்ல முறையில் வாழ்ந்து வந்துள்ளார்.
இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில்
ஜெயராமன் ஹேர் சென்டர் என்கிற ஜவுரி முடி தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் இவரது கணவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
தற்போது சுமார் 6 மாதகாலமாக அந்த நிறுவனத்தில் இருந்து விலகிக் கொண்டு
சொந்த நிறுவனமாக சேலத்தில் சவுரி முடி கடை நடத்தி வருவதாகவும் மேலும் அங்குள்ள ஒரு சில வாடிக்கையாளர்கள் தங்களிடம் வருவதால் அதை பொறுத்துக் கொள்ள முடியாத பழைய நிறுவன முதலாளியான சரண்வேல் ஜெயராமன் மற்றும் அவரது உதவியாளர் தமிழ் ஆகியோர் ஒன்றிணைந்து தனது கணவர் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரிடம் பொய்யான புகாரை கொடுத்துள்ளனர்
கடந்த வாரம் நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுதா என்பவர் மற்றும் 3 ஆண் போலீசார் ஆகியோர் ஒன்றிணைந்து
சேலத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கதவைத் தட்டி தன்னை விசாரிக்க வேண்டும் என வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்
மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து செல்கிறோம் என கூறி அழைத்து சென்றனர்.
ஆனால் சென்னைக்கு அழைத்து செல்லாமல் வரும் வழியே விக்கிரவாண்டி டோல்கேட் வரை வந்ததும், ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் வாகனத்தை பின் தொடர்ந்து வந்த பழைய நிறுவன உதவியாளர் காரை லாட்ஜில் வரவழைத்து
நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுதா மற்றும் பழைய முதலாளியான உதவியாளர் தமிழ் ஆகிய இருவரும் இணைந்து தனது கணவர் எங்கே என துடிக்க துடிக்க அடித்து துன்புறுத்தியதாகவும் தனது மகனின் மீது கஞ்சா வழக்கைப் போட்டு விடுவேன் என கூறி மிரட்டல் விடுத்துள்ளதாகவும், மேலும் தான் அடி வாங்குவதை பார்த்து பழைய நிறுவனத்தின் உதவியாளர் ரசித்து கொண்டிருந்ததாகவும் பின்னர்
உன்னை நல்ல முறையில் அழைத்து சென்றேன்; அதேபோல நல்ல முறையில் கொண்டு வந்து சேலத்தில் வீட்டில்
விட்டு விட்டேன் என ஒப்பிட்டு வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கியதாகவும், பின்னர் சென்னைக்கு விசாரணைக்கு அழைத்து செல்வதாக பொய் கூறி தனியார் விடுதியில் ரூம் போட்டு போலீசார் மற்றும் நிறுவன உதவியாளர் அடித்ததும் புகார்தாரின் உதவியாளர் ரசித்ததும் இவை இரண்டுமே அந்த விடுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் உள்ளதாகவும் ஆனால் போலீசார் லாட்ஜின் மேலாளரை மிரட்டி உள்ளதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டாக டிஜிபி அலுவலகத்தில் நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுதா மீதும் மேலும் பழைய சவுரி முடி நிறுவனத்தின் உரிமையாளரான சரண்வேல் ஜெயராமன் மற்றும் நிறுவனத்தின் உதவியாளர் தமிழ் ஆகியோர் மீதும் பாதிக்கப்பட்ட பெண்மணி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்ததாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்