அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் ஓ. பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி அளித்த இந்த உத்தரவை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

இது அவசர மனுவாக எடுத்துக்கொள்ளப்பட்டு இன்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க இருக்கிறது.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவரது அணியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளார்.

அ.தி.மு.க. கட்சியை கைப்பற்றும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருவது குறித்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் பதில் அளிக்கையில் ”ஹீரோ வில்லனிடம் அடிவாங்கிக் கொண்டிருப்பார். கடைசியில் ஒரே அடி. வில்லன் அவுட்டாகி விடுவார். இந்த கதை நடக்கும்.அ.தி.மு.க. நல்லா இருக்க வேண்டும்.

கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆட்சி வர வேண்டும் என்ற எண்ணம். அதை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம். இந்த மனநிலையில்தான் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார்” எனக் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons