உ.பி. மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 24 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு சாதனை படைக்கப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சிகள் துவங்கின. நிகழ்ச்சி நடந்த மேடையில் கடவுள் ராமர், லட்சுமணர், சீதா வேடம் அணிந்தவர்களை கவர்னர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர்.

அயோத்தியில், கடந்த 2017 முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று தீப உற்சவம் எனப்படும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி விமர்சையாகி நடந்து வருகிறது. அப்போது, நகரில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்படும். 2017 ம் ஆண்டு 1.71 லட்சம் தீபங்களும், 2018 ல் 3.01 லட்சம் தீபங்களும், 2019ல் 4.04 லட்சம் லட்சம் தீபங்களும், 2020 ல் 6.06 லட்சம் தீபங்களும், 2021ல் 9.41 லட்சம் தீபங்களும், 2022ல் 15.76 லட்சம் தீபங்களும் ஏற்றப்பட்டது.

இந்த ஆண்டு, ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு உள்ளதால், உலக சாதனை படைக்க 24 லட்சம் தீபங்கள் ஏற்ற திட்டமிடப்பட்டது. ராமர் கோயில் சுற்று பகுதிகளில் 51 இடங்களில் ஏற்றப்படுகிறது. இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி இன்று இரவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த தீப உற்சவம் விழா, மாலை கோலகலமாக துவங்கியது. ராமாயணத்தை மையமாக வைத்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்காக கடவுள் ராமர், லட்சுமர், சீதை வேடம் அணிந்து வந்தவர்களை கவர்னர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் மாலை அணிவித்து வரவேற்றனர். அதற்கு முன்னதாக, அவர்கள் வந்த தேரை யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இழுத்து வந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons