மருத்துவ துறையில் திறம்பட செயல்பட்டதற்காக, பிரிட்டன் பார்லிமென்டில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்சுப்பிரமணியனுக்கு, ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டு உள்ளது.
உலக தமிழ் நிறுவனம் சார்பில், ‘லண்டன் 4வது சர்வதேச மருத்துவ சிறப்பு விருதுகள் – 2021’ வழங்கும் நிகழ்ச்சி, பிரிட்டன் பார்லிமென்ட் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், அமைச்சர் சுப்பிரமணியனுக்கு, சுகாதாரம் மற்றும் குடும்பநல துறையில் சிறப்பாக பணியாற்றி வருவதற்காகவும், கொரோனா பேரிடர் பெருந்தொற்று காலத்தில் திறம்பட செயல்பட்டதற்காகவும், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
அமைச்சர் சுப்பிரமணியன், சென்னையில் வெள்ள பாதிப்பு தடுப்பு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், இந்த விருதை, அவரது மகன் டாக்டர் செழியன் மற்றும் குடும்பத்தினர் பெற்றனர்.