வங்கி கணக்கு தொடங்குவதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை 440 மில்லியன் பேர் பிரதமரின் ‘ஜன்தன்’ திட்டத்தின்கீழ் வங்கிக் கணக்கைத் தொடங்கி உள்ளனர். இதில் 55 விழுக்காட்டினர் பெண்கள் ஆவர்.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வங்கிக் கணக்குகளின் வாயிலாகவே மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.