தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சீர்காழியில் நடைபெற்றது.
கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
மாவட்ட தலைவர் வைத்தியநாதன் தலைமை ஏற்றார். மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் கௌரவத் தலைவர் சிவபிரகாசம் பிள்ளை மாவட்ட ஒருங்கிணைப்புத்குழுத் தலைவர் வேட்டங்குடி சீனிவாசன், நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஜூன் 3 4 5 தேதிகளில் சென்னையில் நடைபெறும் அக்ரி எக்ஸ்போ 2022 மாநாடு கருத்தரங்கில் 500 விவசாயிகள் குடும்பத்துடன் மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து பங்கேற்பது என முடிவெடுத்தனர்.