சபரிமலை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்ட சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சபரிமலை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்ட சிறப்பு கட்டண ரெயில் இயக்குவதற்கு ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி சம்மந்தப்பட்ட ரெயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து டிசம்பர் 3, 10, 17, 24, 31, ஜனவரி-7, 10, 12, 14ந்தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து டிசம்பர்-5, 12, 19, 26, ஜனவரி-2, 9, 11, 13, 16ந்தேதிகளில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை வந்தடையும். இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து வரும் டிசம்பர் 23ந்தேதி மாலை 3.30 மணிக்கு புறப்படும் மற்றொரு ரெயில் நாகர்கோயிலுக்கு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு சென்றடையும்.

24ந்தேதி நாகர்கோயிலில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். வரும் 26ந்தேதி நாகர்கோயிலில் இருந்து மாலை 7.30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இங்கிருந்து 27ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 4.20 மணிக்கு நாகர்கோயில் சென்றடையும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது என கூறப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons