இவ்வளவு பாதுகாப்பாக…. உற்சாகமாக… ஓடும் பஸ்சுக்குள்ளேயே உல்லாசமாக இருந்தபடியே பயணிப்பது தனி சுகம் தான் என்கிறார்கள் அந்த ஆசையுடன் செல்லும் ஆண்களும், ஆசையை தணிக்கும் அழகிகளும்…!ஆம்னி பஸ்களுக்குள் இவ்வளவு சமாச்சாரம் நடக்குதா..? என்று ஆச்சரியமாகத்தான் நினைக்க தோன்றும். ஆம்னி பஸ்களில் ஒரு காலத்தில் குஷன் இருக்கைகள், புஷ் பேக் இருக்கைகள் தான் இருந்தன. இருந்தாலும் இரவு நேர பயணத்துக்கு படுக்கை வசதியை பயணிகள் விரும்பினார்கள். எனவே ரெயில்களில் இடம் கிடைக்காதவர்கள் மட்டுமே பஸ் பயணத்தை தேடிவந்தார்கள்.எனவே பஸ்களிலும் படுக்கை வசதியை அறிமுகப்படுத்தினார்கள். அதுவும் நட்சத்திர ஓட்டல்களை போல் இந்த படுக்கைகள் தனி அறைகள் போலவே சொகுசாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.சுற்றிலும் திரைச்சீலைகள், சொகுசான மெத்தைகள், தனித்தனி டி.வி. வசதிகள், மெலிதாக மின்னும் இரவு விளக்குகள். தேவையில்லை என்றால் அனைத்தும் விடலாம். குளிர்சாதன வசதி வேறு.இவ்வளவு சொகுசாக இருக்கும்போது துணையையும் தேடுவது இயற்கை தானே? ஆரம்பத்தில் காதலர்கள் சிலர் தங்களுக்கு இந்த வசதி ரொம்ப வசதியாகி விட்டதாக காதல் பயணத்தை தொடர்ந்தார்கள்.அதுவும் ஏதோ ஒரு சில பஸ்களில் ஒன்றிரண்டு பேர் மட்டும் சென்றதால் பெரிய அளவில் வெளிச்சத்துக்கு வரவில்லை. ஆனால் இப்போது நடமாடும் நட்சத்திர விடுதிகள் போலவே இதை சொகுசு பஸ்கள் மாறிவிட்டன.குறிப்பாக பெண் சுகம் தேடி செல்லும் ஆண்கள் இந்த மாதிரி பஸ்களை தங்களுக்கு பாதுகாப்பானதாக கருதுகிறார்கள்.நகரில் ஏதாவது ஒரு ஓட்டல் அறை எடுத்து தங்கினாலும் வேலை முடிந்து வெளியே செல்லும் வரை திக்… திக்… என்று தான் இருக்கும். போலீஸ் சோதனை ஏதாவது நடந்தால் சிக்கி கொள்வோமே என்ற பயம் தான் அது.ஆனால் இந்த மாதிரி பஸ் பயணத்தில் அந்த மாதிரி பயம் ஏதும் இல்லையாம். இரண்டு படுக்கைகளை ஏதாவது ஒரு நகரத்துக்கு முன்பதிவு செய்தால் போதும்.சென்னையில் இருந்து பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, கோவை செல்லும் பஸ்களில் இந்த உல்லாச பயணம் செய்பவர்கள் அதிக அளவில் பயணிப்பது தெரிய வந்துள்ளது.சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட பஸ்… விளக்குகள் அணைக்கப்பட்டதும் திரை சீலைகளை நன்றாக இழுத்து மூடிவிட்டு நித்திரைக்கு தயாரானார்கள் பயணிகள். தரையில் மிதக்கும் கப்பல் போல் வேகம் தெரியாதபடி பஸ் வேகம் பிடித்து ஓடி கொண்டிருந்தது. பஞ்சணையில் மஞ்சம் கொண்ட ஜோடிகள் தங்கள் விளையாட்டை தொடங்கினார்கள். நேத்து ராத்திரி எம்மா..தூக்கம் போச்சுடி எம்மா…என்ற கதையில் பக்கத்து படுக்கை பயணிகள் அந்த ராத்திரியில் தூக்கத்தை தொலைத்தார்கள். காரணம் ‘அச்சாரத்தை போடு கச்சேரியை கேளு. சின்ன உடல் சிலுக்கு சில்லுன்னு தான் இருக்கு…’ என்பதை போல் அவர்கள் ஆடிய விளையாட்டில் வெளிவந்த முணு முணுப்பு சத்தம் தான்…!பொறுத்து பார்த்தவர்கள் பஸ் ஊழியர்களிடம் கூறி இருக்கிறார்கள். பாவம், அவர்கள் என்ன செய்வார்கள்? அரைக்கதவை திறக்க முடியுமா? திரை சீலையை விலக்க முடியுமா?அப்படி விலக்கி விவகாரத்தில் சிக்கிய ஊழியர்கள் பலர். ‘யோவ், விவஸ்தை இருக்கா உனக்கு…? என்று கேட்பது மட்டுமல்ல சொல்ல முடியாத வார்த்தைகளால் அர்ச்சனைகளை கேட்டு ஆடிப்போய் இருக்கிறார்கள். நாங்கள் கணவன்-மனைவி, அல்லது காதலர்கள்… என்று எங்கள் தனியுரிமையில் தலையிட நீ யார்? கட்டணம் கொடுத்து தான் பயணிக்கிறோம். இந்த மாதிரி அநாகரீகமாக நடந்து கொண்டால் பஸ் உரிமையாளரிடம் புகார் செய்வோம் என்று மிரட்டி இருக்கிறார்கள்.யார் அந்த பச்சைக்கிளி, செல்லக்கிளி என்று அடையாளம் கேட்கவா முடியுமா? எங்களை விட்டால் போதும் என்று ஊழியர்கள் ஒதுங்கி விடுகிறார்கள். மறுநாள் காலையில் பஸ்சை சுத்தம் செய்யும்போது தான் ஆணுறைகள், காலி மது பாட்டில்கள் எல்லாம் கிடப்பதாகவும் கர்மம்.. கர்மம்… என்று தலையில் அடித்துக்கொண்டே அதை சுத்தம் செய்வதாகவும் கூறுகிறார்கள்.அதே படுக்கை விரிப்பை மீண்டும் மாலை பயணத்துக்கு பயன்படுத்த முடியாது என்பதால் தினமும் வெளுக்க போடுகிறார்களாம்.இந்த மாதிரி சம்பவங்கள் தொடர்பாக போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு விசாரணையும் நடந்து இருக்கிறது.அப்போது, நாங்கள் பெரியவர்கள், எங்கள் சம்மதத்தோடு பயணிக்கிறோம். எங்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்று எதிர்கேள்வி கேட்டு இருக்கிறார்கள். எனவே இது சட்ட விரோதமானது என்றோ அல்லது விபசாரம் என்றோ போலீசாரால் கூட நிரூபிக்க முடியாமல் போகிறது. ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்வாக இருப்பதாக ஆதங்கப்படுகிறார்கள் உண்மையாக பயணிக்கும் பயணிகள். ஆனால் ஜிகு ஜிகு பஸ்சில் இப்படி ஜிம் ஜக் என்றவாறு பயணிக்கும் பயணிகளுக்கு (?!) இந்த கட்டணமெல்லாம் ஒரு ஜூஜூபி…!புதிதாக உருவெடுத்து இருக்கும் இந்த தலைவலியை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் போலீசும் கையை பிசைகிறது.விபசாரத்தில் தள்ளுவது, ஈடுபடுவது போன்ற ஒழுக்க கேடான செயல்களுக்கு தனித் தனி தண்டனை உள்ளது. ஆனால் நடக்கும் இடம், நடக்கும் விதம் எல்லாம் முற்றிலும் மாறுபாடாக இருப்பதால் எப்படி தடுப்பது? எப்படி சமாளிப்பது? என்பதே இப்போதைய கேள்வி.

The short URL of the present article is: https://reportertoday.in/ztbd

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons