மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான ஸ்ரீ மகாவிஷ்ணு தேவர்கள், மனிதர்கள், உயிரினங்கள், தன் பக்தர்கள், இந்த உலகம் என எல்லாவற்றையும் காக்கும் பொருட்டு பல அவதாரங்கள் எடுத்துள்ளார்.
அவற்றில் இதிகாசமாக ஸ்ரீ ராமரின் அவதாரத்தை ராமாயணமாகவும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத்தையும், தர்மத்தை நிலைநாட்டக்கூடிய மகாபாரதம் என கொண்டாடப்படுகிறது.
மகாபாரத போரின் போது, அர்ஜுனனிடம் தர்மங்களை உணர்த்திய தருணத்தை, நாம் இன்றும் இந்து சமயத்தின் புனித நூலாக பகவத்கீதை என்ற பெயரில் படித்து வருகிறோம்.