முதல்வர் மு.க ஸ்டாலின் தனது 69-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று முதலமைச்சர் மலரஞ்சலி செலுத்தினார். இவரின் பிறந்த நாளுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதற்க்கு, “தங்கள் ஒத்துழைப்புடன் நான் தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.