தருமபுரி மாவட்டம் பாப்பராம்பட்டியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம்(61). விலங்கியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர், இண்டூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியராக பணியாற்றி கடந்த 2020ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பணிக்காலங்களில் இவர் இரண்டு முறை அரசின் நல்லாசிரியர் விருதை பெற்றுள்ளார்.

ஆசிரியராக பணியாற்றிய போது பல மருத்துவர்களை உருவாக்கிய சிவப்பிரகாசத்திற்கு சிறிய வயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தாக கூறப்படுகிறது. இதனால், கடந்தாண்டு நீட் நுழைவுத்தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பை உச்சநீதிமன்றம் நீக்கியது. அதனைத் தொடர்ந்து சிவப்பிரகாசம் கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றார்.

மேலும், தனது பள்ளி படிப்புகளை ஆரம்பம் முதலே அரசு பள்ளிகளில் படித்ததால், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டில் அவருக்கு 249வது இடம் கிடைத்தது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜனவரி 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம் ஜனவரி 28ம் தேதி கலந்தாய்வுக்காக அழைக்கப்பட்டார். இருப்பினும் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்பதா? வேண்டாமா என குழப்பத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

சிவப்பிரகாசத்தின் மகன் கன்னியாகுமரியில் மருத்துவம் படித்து வருகிறார். அவரிடம் ஆலோசனை நடத்தியபோது, உங்களது மருத்துவ சேவையானது இன்னும் 10 முதல் 20 ஆண்டுகள் வரைதான் இருக்கும், ஆனால், அந்த இடத்தை வேறு ஒரு இளைஞருக்கு விட்டுக்கொடுத்தால் 40 முதல் 50 ஆண்டுகள் மருத்துவ சேவையில் இருப்பார் எனக்கூறியுள்ளார்.

இதனால், இன்று மருத்துவ கலந்தாய்வில் கலந்துக்கொண்ட சிவப்பிரகாசம் தனக்கு மருத்துவ சீட் பெற விரும்பவில்லை எனக்கூறி விட்டுக்கொடுத்துள்ளார். இதனால், அரசு பள்ளி மாணவர் ஒருவருக்கு அந்த இடம் கிடைக்கவுள்ளது.
50 ஆண்டு கால கனவு நிறைவேறியது… திமுகவிற்கு நன்றி தெரிவித்த‌‌ பாமக!

இதுகுறித்து சிவப்பிரகாசம் கூறியதாவது: “சிறிய வயது முதலே மருத்துவம் படிக்க வேண்டும் என ஆசை இருந்ததால் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். அதேநேரத்தில் தற்போது 61 வயதாவதை கருத்தில் கொண்டு அரசு பள்ளியில் படித்த மாணவரின் மருத்துவ கனவை நினைவாக்கும் பொருட்டு சீட்டை தேர்வு செய்யவில்லை. இருப்பினும் மருத்துவ கல்ந்தாய்வு நடைமுறைகள் குறித்து அறிந்துக்கொள்வதற்காகவே இன்று கலந்தாய்வில் கலந்துக்கொண்டேன்” எனக்கூறினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசத்தின் இந்த செயல் நெகிழ்ச்சியடைய செந்துள்ளதாக பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons