வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 65.71 லட்சம் பேர் பதிவு* சென்னை: தமிழக அரசின், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காக 65.71 லட்சம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்காக, படித்த இளைஞர்கள், அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வருகின்றனர். கடந்த மாதம் 31ம் தேதி நிலவரப்படி, 65 லட்சத்து 71 ஆயிரத்து 300 பேர், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 30.55 லட்சம் பேர் ஆண்கள்; 35.16 லட்சம் பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 291 பேர். வேலைக்கு பதிவு செய்துள்ளவர்களில், 16.80 லட்சம் பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். 27.98 லட்சம் பேர், 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லுாரி மாணவர்கள். அரசு பணி வேண்டி, 31 வயது முதல் 45 வயது வரை காத்திருக்கும் வேலை நாடுநர்கள் 18.32 லட்சம் பேர். 46 வயது முதல் 60 வயது வரை முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2.54 லட்சம்; 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,780 பேர். மாற்றுத் திறனாளிகள் 1.48 லட்சம் பேர், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்துள்னளர்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 65.71 லட்சம் பேர் பதிவு*சென்னை: தமிழக அரசின், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காக 65.71 லட்சம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.அரசு வேலை…