“பகுத்தறிவு மூலமாக மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காக ராமாயண, மகாபாரத புராண இதிகாச குப்பைகளை மக்களின் மூலையில் திணித்துள்ளனர்” என்று பாஜக – ஆர்எஸ்எஸ் குறித்து விடுதலை சிறுதலைக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசியுள்ளார்.
மனு நீதி என்று பரவலாக அறியப்படும் மனுஸ்மிருதி மனுஸ்மிருதி குறித்து 2020இல் திருமாவளவன் பேசிய பேச்சு ஒன்று அப்போது கடுமையான விவாதத்துக்கு உள்ளானது. பாஜகவினர் அப்போதும் இவருக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்ததுடன் போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.
புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கூட்டாட்சிக் கோட்பாடும் நாடாளுமன்ற சனநாயகமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று, வெள்ளிக்கிழமை, நடைபெற்றது.
திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் உறுப்பினர் சிந்தனை செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சலீம், திமுக சார்பில் புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு எதிராக இயற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதின் எதிரொலியாக இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யத் திட்டமிட்டதாக திருமாவளவன் மேடையில் தெரிவித்தார்.