கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விழா நாட்களில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகள் அனைத்தையும் வேறு தேதிகளுக்கு மாற்றுமாறு கேந்திரிய வித்யாலயா மண்டல துணை ஆணையருக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில், பண்டிகை நாளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வர்கள் விரக்தியில் உள்ளனர். இது குறித்து முதல்வர் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தேர்வு நாளை மாற்றி அமைக்குமாறு மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கள் பண்டிகை நாள்களான ஜன.13, 16,17,18 ஆகிய நாள்களில் 6 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்வு நாள்களை பொங்கல் பண்டிகைக்கு பின்னர் மாற்றி அமைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க | வேலை செய்யும் நேரத்தைவிட பணியின் தரமே முக்கியம்! -ஆனந்த் மஹிந்திரா

இந்த நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விழா நாள்களில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகள் அனைத்தையும் வேறு தேதிகளுக்கு மாற்றுமாறு கேந்திரிய வித்யாலயா மண்டல துணை ஆணையருக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கேந்திரிய வித்யாலயா மண்டல துணை ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

சென்னை, மதுரை, திருச்சி பள்ளிகளில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஜனவரி 13, 16, 17, 18 தேதிகளில் 6 ஆம் முதல் 11 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொங்கல் அறுவடைத் திருநாள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் பண்பாட்டுடன் இணைந்தது. தமிழ்நாடு அரசு ஜனவரி 14 முதல் 18 வரை விடுமுறை அறிவித்துள்ளது.

கேந்திரிய வித்யாலயா குழந்தைகள் மட்டும் பொங்கல் விடுமுறையின் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் போய் விடக் கூடாது. இது மாணவர்களுக்கு திருவிழா கால விடுமுறையை கொண்டாட முடியாத உளவியல் தாக்குதலையும், தமிழ் பண்பாட்டின் மீதான ஒவ்வாமையையும் ஒருசேர வெளிப்படுத்தும் செயல்.

ஆகவே தேர்வுத் தேதிகளை மாற்றி பொங்கல் விடுமுறைக்கு பின்னர் நடத்துமாறு வலியுறுத்தி உள்ளார்.

The short URL of the present article is: https://reportertoday.in/o2tk

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons