நீட் விவகாரத்தில் பாஜக மீது எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை தி.நகரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நீட் மசோதாவை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை அரசுக்கு கவர்னர் தனியே அனுப்பியிருக்கிறார்; இதை இதுவரை தமிழக அரசு வெளியிடவில்லை. நீட் விவகாரத்தில் பாஜக மீது எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அதிமுக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை நிராகரித்தார் ஜனாதிபதி.
நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு பாதிக்கப்படவில்லை. எதன் அ

டிப்படையில் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என சொல்லப்படுகிறது? மருத்துவ படிப்பில் தமிழ்நாட்டிற்கான சீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது. கவர்னர் மசோதாவை திருப்பி அனுப்பியதால் திமுக உருவாக்கிய நீட் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறோம் என்றார்.

மசோதாவை திருப்பிய கவர்னரின் விளக்கத்தை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும். நீட் தொடர்பான நாளைய அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது எனவும் ராகுல்காந்தி என்ன சொன்னாலும் அதற்கு எதிர்மறையாக நடக்கும் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons