மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுவதையொட்டி தலைவர்களின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி தினமும் காணொலி வாயிலாக பிரசாம் செய்து வருகிறார். இன்று மாலை 5.30 மணிக்கு ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

11-ந் தேதி நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரான முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். நாளை (11-ந் தேதி) மதுரை, திண்டுக்கல், கரூர் நகரங்களுக்கு சென்று பிரசாரம் செய்கிறார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. நாளை மாலை காஞ்சிபுரம், உத்திரமேரூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டா லின் எம்.எல்.ஏ. கடலூரில் இன்று மாலை பேசுகிறார்.

நாளை மறுதினம் சென்னையில் பிரசாரம் செய்கிறார். தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று மாலை சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசுகிறார். நாளை (11-ந் தேதி) ராஜபாளையம், திருநெல்வேலியில் பேசுகிறார். தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி நாளை ராணிப்பேட்டை, ஆற்காடு, மேல் விகாரம் நகராட்சி பகுதிகளில் பேசுகிறார். திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் நாளை அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆலங்குடியில் பேசுகிறார். பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நாளை நாகர்கோவில், சுசீந்திரம், அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரியில் பேசுகிறார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons