கர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடங்கணசாலை நகராட்சியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் சித்தர் கோவிலிலுள்ள காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தி.மு.க.வை விமர்சித்து கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ முத்து கூறுகையில், இடங்கணசாலை நகராட்சியில் எங்களுக்கு ஒரே ஒரு சீட்டு ஒதுக்கி உள்ளனர். துண்டு பிரசுரங்களில் காங்கிரஸ் தலைவர்களின் படம் இல்லை. தி.மு.க.வின் இந்தச் செயலானது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் எங்களூக்கு ஒதுக்கப்பட்ட ஒரே இடத்திலும் கூட தி.மு.க. வினர் சுயேச்சை வேட்பாளரை களம் இறக்கி உள்ளனர். இதற்கு காங்கிரஸ் பாடம் புகட்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநில பொதுக் குழு உறுப்பினர் ராஜ முத்து, நகர தலைவர் சந்திரன், மேற்கு மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சிவசக்தி, மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார் மற்றும் பொறுப்பாளர்கள் தினகரன், குழந்தைவேலு, ஆர்.பாலசுப்பிரமணியன், கந்தசாமி, பழனியப்பன், கோவிந்தன், சுப்பிரமணி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons