சென்னை:இந்தியாவில் தங்கத்துக்கு 3 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. இறக்குமதி வரி முன்பு 15 சதவீதம் இருந்தது. மக்கள் நலன் கருதி கடந்த மத்திய பட்ஜெட்டில் 9 சதவீதம் குறைக்கப்பட்டு, தற்போது 6 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.இவ்வாறு தங்கத்தின் மீதான இறக்குமதிவரி குறைக்கப்பட்டபோதும், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இஸ்ரேல்-ஹமாஸ், ரஷியா-உக்ரைன் போர் மற்றும் அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வதந்திகள் பகிரப்படுவது, சீனாவின் மத்திய வங்கி தங்கத்தில் மீண்டும் அதிக அளவு முதலீடு செய்து வருவது உள்ளிட்டவை தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும்.தற்போது ஒரு பவுன் தங்கத்தின் விலை (22 காரட்) ரூ.55,166-ஆக உள்ளது. விரைவில் கிராம் ரூ.8 ஆயிரமாகவும், பவுன் ரூ.64 ஆயிரமாகவும் உயர வாய்ப்புள்ளது.தற்போது ஆவணி மாதம் தொடங்கி உள்ள நிலையில் திருமண சீசன் ஆரம்பமாகி உள்ளது. எனினும், விலை உயர்வால் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் இல்லை.புரட்டாசி, ஐப்பசி என அடுத்து வரும் மாதங்களிலும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தங்க நகை விற்பனை குறைந்துள்ளது.
The short URL of the present article is: https://reportertoday.in/j5l3